விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சோழன் எல்லோருமே சேரனை திருமணம் செய்து கொள்ள சொன்னார்கள். சேரன், சந்தாவின் பெற்றோர்கள் சம்மதித்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன். பாண்டியனுக்கு வேண்டுமென்றால் திருமணம் செய்யலாம் என்றார். பாண்டியன், அண்ணனுக்கு முதலில் நடக்கட்டும். அதற்குப் பிறகு நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். இருவரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் நடேசன் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் நிலா வேலை தேடி அலைகிறார். எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் இல்லாததால் வேலை கிடைக்கவில்லை.

இதனால் நிலா ரொம்பவே மனமடைந்து போயிருக்கிறார். சோழன், நிலாவிற்கு ஆறுதல் சொன்னார். அப்போது நிலாவின் தோழி போன் செய்து ஒரு ரெஸ்டாரண்டுக்கு வர சொன்னார். அப்போது நிலாவிடம் தோழி, நாங்கள் புதிதாக ஸ்டார்ட் ஆப் கம்பெனி தொடங்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு நீ 5 லட்சம் ரூபாய் கொடுத்து பார்ட்னர் ஆகி கொள். வேலைக்காக நீ சிரமப்படுகிறாய். அதற்காகத்தான் இதை சொன்னேன் என்றார். பின் சோழன்- நிலா இருவரும் அந்த வேலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். நிலா, அவ்வளவு பணம் ரெடி பண்ண முடியாது. அந்த வேலை வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் என்றார்.
அய்யனார் துணை:
வானதி பேசாததால் பாண்டியன் ரொம்பவே கவலையில் இருந்தார். பின் தன் கடைக்கு வரும் கஸ்டமர்களிடம் இருந்து போன் வாங்கி வானதியிடம் பேசி இருந்தார். பாண்டியன் குரலை கேட்டவுடன் வானதி ஃபோனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் பல்லவன், காயத்திரியை அழைத்துக் கொண்டு ஒரு லாஜிக்கு போனார். இதை சோழன் பார்த்து விடுகிறார். பின் சோழன், பல்லவன் கன்னத்தில் அறைந்து எதற்காக இப்படி செய்கிறாய் என்று கத்தினார். ஆனால், அது சோழனின் கனவு.

சீரியல் ட்ராக்:
சோழன் கூப்பிடுவதறதுக்குள் பல்லவன், காயத்ரி லாஜிக்குள் சென்று விட்டார். இன்னொரு பக்கம் கல்லூரியின் நிர்வாகம் சேரனுக்கு போன் செய்தார்கள். அப்போது கல்லூரி நிர்வாகம், பல்லவன் ஒரு வாரம் காலேஜுக்கு வரவில்லை என்று சொன்னார். அதை கேட்டவுடன் சேரனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இன்னொரு பக்கம் பல்லவன் சென்ற லாஜிக்கு போலீஸ் ரைட் போகிறார்கள். சோழன் பயந்து போய் நிற்கிறார்.
https://www.youtube.com/watch?v=iZnSy6GLxSo
சீரியல் ப்ரோமோ :
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேரன், வேலைக்கு என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்கிறார். நிலா, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது சோழன், அவர் வேலை தேட தேவையில்லை. அவரே ஓனராக போகிறார். ஐந்து லட்சம் இருந்தால் ஓனராகி விடலாம் என்று சொல்கிறார். பாண்டியன், என்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன். இந்த வீட்டு பத்திரத்தை அடமானம் வைக்கலாம் என்று சொல்கிறார். நடேசன் அதற்கு ஒத்துக்கொள்கிறார். அந்த சமயம் பார்த்து வந்த வானதி, எதற்காக வீட்டு பத்திரத்தை வைக்கணும் என்று கேட்கிறார்.






