விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் வேண்டாம் என்று சொல்லியும் வானதி கேட்கவில்லை. ஒரு வழியாக வானதி பாண்டியனுடன் வந்தார். பின் பாண்டியன் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது வானதி, நேரமாகிவிட்டது வீட்டிற்கு போகவேண்டும் என்று சண்டை வாங்கினார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், இதனால் தான் நான் வேண்டாம் என்று சொன்னேன். இதற்காக மீண்டும் காசு போட்டு செலவு செய்து வர முடியாது. எவ்வளவு நேரம் ஆனாலும் பொருள்களை எல்லாம் வாங்கிக் கொண்டுதான் போகணும் என்று கருதுகிறார். வானதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

வானதி வீட்டிற்கு போகவேண்டும் என்று அவசரப்படுவதால் பாண்டியன் கடுப்பாக்கி திட்டி விட்டார். பின் போன வேலையும் முழுவதுமாக முடிவடையாதல் தான் பாண்டியன் கோபத்திலேயே சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ராகவ் தான் கொடுத்த வாட்ச்சை கட்டவில்லை என்று நிலாவிடம் கேட்டார். நிலாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. இருந்தாலுமே வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் இது எனக்கு ஒருவர் கொடுத்த கிஃப்ட். அதனால் தான் இதை கட்டிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
அய்யனார் துணை:
இன்னொரு பக்கம் வானதி வீட்டிற்கு வரவில்லை என்று அவருடைய அப்பா, அம்மா எல்லோருமே பதட்டமாகி புலம்பி கொண்டிருந்தார்கள். வானதியின் அண்ணன், பாண்டியன் இடம் வேலை செய்பவரிடம் சென்று விசாரித்தார். இன்னொரு பக்கம் நிலா, சோழனிடம் ராகவ கொடுத்த வாட்ச்சை பற்றி பேச வந்தார். சோழன் கடுப்பாகி கோபப்படுகிறார். அதற்குப்பின் ராகவ், நிலாவிற்கு தொடர்ந்து மெசேஜ் போட்டுக் கொண்டே இருந்தார். அதை எல்லாம் பார்த்து நிலாவிற்கு கோபம் தான் வந்தது. எந்த ரிப்ளையும் செய்யாமல் போனை வைத்து விட்டார்

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி, பாண்டியன் இருவரும் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பாண்டியன், ஏதாவது பிரச்சனை வருமா? என்று பயத்திலேயே வேகமாக வண்டி ஓட்டிக்கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் வானதியின் பெற்றோர்கள், பாண்டியன் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். சோழன், சேரன் எல்லோருமே பாண்டியன் மீது தவறு இருக்காது என்றெல்லாம் சொல்கிறார்கள். கோபத்தில் வானதியின் அம்மா, சேரன் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் சேரன், பாண்டியனுக்கு போன் செய்து நடந்ததை செல்கிறார். அப்போது பாண்டியன், வானதி என்னுடன் தான் இருக்கிறார் என்கிறார். பின் சேரன், வானதி அம்மாவிடம் உண்மையை சொல்கிறார். கோபத்தில் வானதியின் அம்மா பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், உன்னால் தான் என்னுடைய குடும்பம் அவமானப்பட்டு இருக்கிறது. இதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்கிறார். வானதி, உனக்கு இப்பவும் உன்னுடைய குடும்பம் தான் முக்கியமா? என்று சண்டை போடுகிறார். பின் பாண்டியன், வானதியை அவருடைய வீட்டில் விடுகிறார்.






