விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் அய்யனார் வீட்டை வீட்டை சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று நடேசன் அண்ணன் பார்த்தார். அதற்குள் நிலா- சோழன் இருவரும் ஒளிந்து கொண்டார்கள். நடேசன் அண்ணன் கிளம்பியுடன் நிலா-சோழன் அங்கிருந்து எப்படியோ வந்து விட்டார்கள். பின் ஹோட்டலுக்கு வந்த நிலா, உயில் கிடைத்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டு பேசி இருந்தார். பின் எல்லோரும் தூங்கி இருப்பதால் நிலா- சோழன் இருவரும் ஒரே ரூமில் தங்கிக் கொண்டார்கள்.

நிலா-சோழன் இருவரும் தாங்கள் எடுத்து வந்த உயில் பத்திரத்தை நடேசன் இடம் காண்பித்தார்கள். பல்லவன், சேரன், பாண்டியன் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பின் அந்த வீடு தங்களுக்கு தான் சொந்தம் என்பது தெரிந்த உடனே எல்லோருமே கிளம்பி வீட்டிற்கு போனார்கள். அங்கு நடேசன் அண்ணன், தங்கை, போலீஸ் எல்லோரும் வந்துவிட்டார்கள். அப்போது நடேசன், தன் பெயரில் இருக்கும் உயில் பத்திரத்தை காண்பித்தார். போலீசார் எதுவுமே பேசவில்லை. நடேசன் அண்ணன்- தங்கை இருவரும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், போலீஸ் கேட்கவில்லை.
அய்யனார் துணை:
ஒரு வழியாக வீட்டிற்கு வைத்த சீலை பிரித்து விட்டார்கள். நடேசன் குடும்பம் சந்தோஷமாக வீட்டிற்குள் சென்றார்கள். இனிமேல் வீட்டில் எல்லா வேலையும் செய்யலாம் என்று நடேசன் குடும்பத்தில் பேசிக்கொண்டார்கள். எல்லோரும் ரொம்ப சந்தோசமாக பேசி கொண்டு இருந்தார்கள். இதை ஒளிந்து நின்று தன் அண்ணன் பார்ப்பதை நடேசன் பார்த்து விட்டு அவரை வேண்டும் என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். நடேசன் அண்ணனை நடுவில் நிற்க வைத்து எல்லோரும் டான்ஸ் ஆடினார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் அய்யனார் வீட்டில் எல்லோருமே பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு தயாராகிறார்கள். சோழன்- நிலா இருவரும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். அப்போது நிலா, தன் வீட்டில் பொங்கல் பண்டிகையை எப்படி எல்லாம் கொண்டாடுவார்கள் என்று சொல்லி ஃபீல் பண்ணுகிறார். சோழனும் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் வானதி, பாண்டியன் இருவரும் பொங்கல் பண்டிகை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது வானதி வேண்டும் என்று வம்பு இழுத்து பாண்டியனிடம் சண்டை போடுகிறார். பின் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதை வானதியின் மாமா பார்த்து விடுகிறார். இதைப்பற்றி வானதியின் மாமா வீட்டில் சொல்லி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்கிறார். உடனே வானதியின் அப்பா- அம்மா இருவருமே சம்மதிக்கிறார்கள். ஆனால், வானதியின் அண்ணன் தான் பிரச்சனை செய்கிறார். இருந்தாலும் வானதியின் அப்பா அம்மா இருவரும் தன் மகனை திட்டி விட்டு பாண்டியனுக்கே வானதியை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






