விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, உங்களால் நான் அவமானப்பட்டு நின்றேன் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். சோழன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இருவரும் சண்டை போடுவதைப் பார்த்து சேரன் விசாரித்தார். நிலா, ஆபீசில் நடந்தது எல்லாம் சொல்லி பாண்டியனுக்கும் உங்களுக்கும் திருமணம் முடிந்த உடனே நான் விவாகரத்து வாங்கிக்கொண்டு இந்த வீட்டை விட்டும் இந்த ஆளை விட்டும் சென்று விடுவேன் என்று சோழனை பார்த்து சொன்னார். இதனால் சோழன் உடைந்து போனார்.

சேரன், பாண்டியனுக்கு ஒரு நல்லது நடக்கப்போகிறது என்பதால் நான் அமைதியாக இருக்கிறேன். தயவு செய்து என்னை எதுவும் பேச வைக்காதே என்று சென்று விட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாண்டியன் விசேஷத்திற்கு ரெடியாகிக் கொண்டிருந்தார்கள். ஆனால், பாண்டியன் மட்டும் வரவில்லை. சோழன், பாண்டியனுக்கு போன் செய்தார். போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. இன்னொரு பக்கம் வானதி வீட்டில் எல்லோரும் தயாராக இருந்தார்கள். வானதியின் அண்ணனுக்கு மட்டும் இந்த விசேஷத்தில் விருப்பமில்லை. இருந்தாலும் வானதிக்காக அவருடைய பெற்றோர்கள் தயாராகி இருந்தார்கள்.
அய்யனார் துணை:
பின் பாண்டியன் வராததால் வீட்டில் உள்ள எல்லோருமே பதட்டப்பட்டார்கள். வானதி, பாண்டியனுக்கு போன் செய்தார். ஆனால் போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. வானதிக்குமே ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி பேசியதை எல்லாம் நினைத்துப் பார்த்தார். பின் இன்னொரு பக்கம் சோழன், பாண்டியன் தேடி சென்றார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த சோழன், கண்டமேனிக்கு திட்டினார். அப்போது பாண்டியன், வானதி வீட்டுக்கு போக வேண்டாம். எல்லோரும் வீட்டிலேயே இருங்கள் என்றார். இதைக்கேட்டு சோழனுக்கு ஷாக்காக இருந்தது

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வராததால் வானதி வீட்டில் எல்லோருமே கோபப்படுகிறார்கள். பின் வானதியின் மாமா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் பாண்டியன், வானதி வீட்டுக்கு வருகிறார். அப்போது எல்லோருமே, எதற்காக இப்படி செய்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்கிறார்கள். அதற்கு பாண்டியன், எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். சேரன் அண்ணனுக்கு திருமணம் ஆன பிறகு நான் வானதியை கல்யாணம் செய்து கொள்கிறேன். அதற்கு முன்பே நான் திருமணம் செய்து கொண்டால் சேரன் அண்ணனுக்கு கல்யாணம் நடக்காது. தயவு செய்து உங்களை காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார். வானதி வீட்டில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
கோபத்தில் வானதி, பாண்டியனை கண்டமேனிக்கு திட்டுகிறார். கடைசியில் வானதி, இனி உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று விடுகிறார். இதனால் பாண்டியன் உடைந்து போய் வீட்டிற்கு வருகிறார். சோழன், சேரன் எல்லோருமே எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்கிறார்கள். பாண்டியன், சேரன் அண்ணனுக்கு திருமணம் ஆன பிறகு நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறார். அப்போது சேரன், நிலா சொன்ன வார்த்தையை நினைத்துப் பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






