விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் சுரேஷ் ரொம்ப அவமரியாதையாக பேசுகிறார் என்றெல்லாம் மதி புகார் கொடுத்தார். சுரேஷிற்கு கோபம் இன்னும் அதிகமாகிறது. போலீஸ் ஸ்டேஷன் என்று கூட பார்க்காமல் மதியை திட்டுகிறார். அந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வந்து விட்டார். பின் சுரேஷ் மீது மதி மீண்டும் புகார் கொடுத்திருக்கும் விஷயத்தை அறிந்த இன்ஸ்பெக்டர், சுரேஷ் வீட்டில் எல்லோரையும் வரவைத்து பிரச்சனைஉயை முடிக்க சொன்னார். பின் சுரேஷ், தங்கராஜ் போன் செய்து போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை எல்லாம் சொன்னார்.

தங்கராஜ் உடனே தன்னுடைய மாமனார், மாமியார் இடம் நடந்ததை சொன்னார். இதனால் லட்சுமி, இவளால் என் மகனுடைய வாழ்க்கை என்னாகப் போகுதோ? அவள் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று வழக்கம்போல ருத்ரதாண்டவம் ஆடினார். தங்கராஜ், எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் வாருங்கள் என்று அழைத்து சென்றார். போலீஸ் ஸ்டேஷனுக்கு சுரேஷின் பெற்றோர்கள் வந்து விட்டார்கள்.
அழகே அழகு:
அப்போது இன்ஸ்பெக்டர், நடந்தது என்ன என்று விசாரித்தார். லட்சுமி, டம்ளர் எடுத்து வைக்க சொன்னதற்கு அவ ரொம்ப மோசமாக பேசிவிட்டாள். அவளாக தான் வீட்டை விட்டுப் போனாள். என் பையன் ரொம்பவே கஷ்டப்படுகிறான் என்று ஒன்றுக்கு இரண்டாக பொய் சொன்னார். பின் மதி உள்ளே வந்தார். மதியை பார்த்தவுடன் போலீஸ் ஸ்டேஷன் என்று கூட தெரியாமல் லட்சுமி, அவருடைய கணவரும் கோவமாக பேசினார்கள். இதையெல்லாம் இன்ஸ்பெக்டர் கவனித்தார். சுரேஷ், தங்கராஜ் இருவரும் லக்ஷ்யை அமைதியாக இருக்க சொன்னார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது இன்ஸ்பெக்டர், என் எதிரிலே நீங்க இப்படி நடந்து கொள்கிறார்கள். வீட்டில் என்னென்ன எல்லாம் பேசி இருப்பீர்கள். இந்த பிரச்சனையை நீங்களே பேசி முடித்து விட்டால் நல்லது. இல்லை என்றால் சுரேஷின் வேலைக்கு தான் பிரச்சனை என்றார். தங்கராஜ், நான் பார்த்துக்கொள்கிறேன். மதியை நாங்கள் வீட்டிற்கு அழைத்து செல்கிறோம் என்றார். இன்ஸ்பெக்டர், அவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தினால் எனக்கு போன் பண்ணுங்கள் என்றார். அதற்குப்பின் மதியை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். தங்கராஜ், மதி மூன்று நாட்கள் என்னுடைய வீட்டில் இருக்கட்டும் என்று சொல்லி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். மதி, மலரிடம் பேச போகிறார். ஆனால், மலர் கோபத்தில் மதியை அவாய்ட் செய்தார்.

சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமாவில் தங்கராஜ், நீ இன்னும் மதியுடன் சேர்ந்து வாழவில்லையா? என்று கேட்கிறார். சுரேஸ், அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை என்கிறார். தங்கராஜ், நீ இன்னைக்கு எங்களுடைய வீட்டிலேயே இருவரும் சேர்ந்து வாழ தொடங்கு. அதற்குப் பிறகு அவள் உன் பேச்சை கேட்பாள் என்று சொல்கிறார். தங்கராஜ் பேச்சைக் கேட்டு சுரேஷ், மதியிடம் கிட்ட நெருங்கி போகிறார். கோபத்தில் மதி, சுரேஷை கீழே தள்ளிவிட அவருடைய மண்டையில் அடிபட்டு வருகிறது. வழி தாங்க முடியாமல் சுரேஷ் கத்துவதால் தங்கராஜ்-ரேவதி இருவரும் பதறிப் போய் பார்க்கிறார்கள்.






