தான் இறந்து விட்டதாக வந்த வதந்திக்கு அப்துல் ஹமீத் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் அப்துல் ஹமீத். இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் ஞாயற்று கிழமைகளில் நாம் அனைவரும் கேட்டு ரசித்த நிகழ்ச்சிகளில் ஓன்று லலிதாவின் “பாட்டுக்கு பட்டு”.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சரியான வசனம், மிரள வைக்கும் தமிழ் உச்சரிப்பு, நம்ப முடியாத ஞாபக சக்தி என மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் பி. எச். அப்துல் ஹமீத். அதற்கு முன் இவர் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருக்கு என்று ஓரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இவரின் குரல் சமீப காலமாக ஒலிக்கவில்லை.
அப்துல் ஹமீத் இறப்பு:
பலரும் இவர் இறந்து விட்டாரோ? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்த நிலையில் சில தினங்களாக இவர் இறந்து விட்டார் என்று செய்தி பரவி இருந்தது. பலரும் என்ன ஆச்சு? ஏன்? என்று எல்லாம் வருத்தத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். உண்மையில் அப்துல் ஹமீத் இறக்கவில்லை. யாரோ சிலர் செய்த தேவை இல்லாத வேலை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து தொகுப்பாளர் அப்துல் ஹமீட் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அப்துல் ஹமீத் வீடியோ:
அதில் அவர், நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷமச் செய்தியை கேட்டு ஆயிரம், பல்லாயிரம் அன்புள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலை கேட்ட பின்பு தான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயம் செய்து கொண்டார்கள். அதிலும் சிலர், என் குரலை கேட்டவுடன் கதறி அழுதார்கள் அதைக் கேட்டவுடன் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வதந்தி குறித்து சொன்னது:
எத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என் தாய் என்ன தவம் செய்து என்னை ஈன்றாளோ என்று நினைத்துக் கொண்டேன். நான் இலங்கை பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதி இருந்தேன். மரணம் மனிதன் தரும் வரம். அதை பற்றிய செய்தி எதிர்மறை சிந்தனைகளை மறக்க செய்து நல்ல நினைவுகளை மட்டும் நினைத்துப் பேச வேண்டும். அப்படி ஒரு அனுபவம் தான் எனக்கு கிடைத்திருக்கிறது.
மரணம் குறித்து சொன்னது:
பல்லாயிரம் பேர் என்னை நேசித்தாலும் என் துறை சார்ந்த, என் மீது பொறாமை கொண்ட சிலர் எதிர்மறையான விமர்சனங்களை பரப்பி இருக்கிறார்கள. இந்த செய்தியை கேட்ட நேரம் முதல் என்னைப் பற்றிய நல்ல நினைவுகளை மட்டுமே அவர்கள் நினைத்து இருப்பார்கள். இது வாழும் காலம் வரை தொடர வேண்டும் என எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.