பிரபல நடிகருடன் நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணம் – மீண்டும் திருமணம் குறித்து அறிவித்த பாக்கியலட்சுமி ஜெனி.

0
1287
- Advertisement -

பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்று போன நிலையில் தற்போது மீண்டும் தன் திருமணம் குறித்து அறிவித்துள்ளார் பாக்கியலட்சுமி ஜெனிபர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாகயலக்ஷ்மி தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். அதன் பின்னர் லட்சுமி வந்துச்சி, சுமங்கலி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடர் மூலம் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இவருக்கும் பிரபல நடிகருமான ஆர் கே சுரேஷுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இவர்கள் திருமணம் நடைபெறாமல் போனது பற்றி தெரியுமா. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர் கே சுரேஷ் மற்றும் திவ்யா இருவரும் பிரஸ் மீட் ஒன்றை வைத்து விரைவில் தாங்கள் திருமணம் செய்துகொள்வதாக கூறி இருந்தார்கள். இவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் இவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

- Advertisement -

ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களது திருமணம் ந்டைபெறாமல் போனது. இது குறித்து பேசிய திவ்யா அவர் நல்ல மனிதர். ஆனால் எங்களுக்குல் நிறைய விஷயங்கள் வேறுபடுகிறது. மேலும் கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இந்த கருத்துவேறுபாடுகள் பெரிதாகி திருமணம் முடிந்து பெரும் பிரச்சனை பெரிதாகி வேண்டாம் என எங்களுக்குள் நாங்களே பேசி முடிவு செய்தோம்.

இதனால் தான் திருமண நிச்சயம் ஆன பின்பும் திருமணம் வேண்டாம் என பிரிந்துவிட்டோம் என கூறினார். இப்படி ஒரு நிலையில் இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும்  கடந்த ஆண்டு அக்டொபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண விழாவில் வெறும் 15 பேர் தான் கலந்து கொண்டார்கள். அக்டோபரில் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் திவ்யா கணேஷ் மீண்டும் தனது திருமணம் குறித்து பேசி இருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா கணேஷ் அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில்  நடிகை திவ்யா கணேஷ் சமீபத்தில் ரசிகர்களுடன் கேள்விக்கு அழகாக பதிலளித்து வந்தார். அந்த வரிசையில் உங்களுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர் ஒருவர், திவ்யா கணேஷிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த நடிகை திவ்யா கணேஷ், விரைவில் எனக்கு திருமணம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், யார் மாப்பிள்ளை என்று தெரியவில்லை. இதன்முலம் விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷுக்கு திருமணம் என்பது முடிவு ஆகியுள்ளது.


Advertisement