விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கோவிலில் தடபுடலாக கொண்டாடி இருந்தார்கள். ஆனால், கோபியை பார்த்து ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தி இருந்தார்கள். பின் ராமமூர்த்தி, மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி தூங்கி இருந்தார். மறுநாள் ஈஸ்வரி, ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார். ஆனால், ராமமூர்த்தி எழவே இல்லை. மொத்த குடும்பமே வந்து ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார்கள். பின் மருத்துவரை செக் பண்ணி, அவர் இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் பரிதவித்து இருந்தது.
தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்த கோபி ரொம்ப அழுதார். ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது இருந்தார்கள். பழனிச்சாமி, இறுதி சடங்கிற்கு தேவையான வேலைகளை செய்தார். அப்போது ராதிகாவின் அம்மா வந்து ஓவராக ட்ராமா செய்தார். கடந்த வாரம், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி இருந்தார். உடனே ஈஸ்வரி, நீ செய்யக்கூடாது. என்னுடைய புருசனின் கடைசி ஆசையே அதுதான் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
பாக்கியலட்சுமி சீரியல்:
உடனே கோபி, என்னுடைய அப்பாவிற்கு நான் தான் இறுதி சடங்கு செய்வேன் என்று அழுது கெஞ்சி இருந்தார். இருந்தாலுமே, ஈஸ்வரி ஏற்றுக் கொள்ளவில்லை. பின் வீட்டில் உள்ள எல்லோருமே ஈஸ்வரியை சமாதானம் செய்தும் அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை. பின் இதை யார் செய்வார்கள்? என்று கேட்டதற்கு பாக்யா தான். மகள் இடத்தில் இருந்து எல்லாமே செய்வாள் என்று சொன்னவுடன் கோபி ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை செய்தார். இதை பார்த்து கோபி அழுது புலம்பி கத்தினார்.
சீரியல் கதை:
ராமமூர்த்தி இறுதி ஊர்வலம் நடந்தது. ராமமூர்த்தியை மயான பூமிக்கு எடுத்து சென்றார்கள். பாக்கியா தான் கடைசி சடங்குகளை எல்லாம் செய்து கதறி கதறி அழுதார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். நேற்று எபிசோடில், ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து விடுகிறது. மன வேதனையில் பாக்கியா, எழில் வீட்டிற்கு வந்தார்கள். இன்னொரு பக்கம், கோபி ராதிகாவிடம் புலம்பி அழ, அவர் ஆறுதல் சொல்லியும் ஏற்றுக் கொள்ளாமல் அப்பாவை நினைத்தும், இறுதி சடங்கை செய்ய முடியாததை நினைத்தும் ரொம்ப புலம்புகிறார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். வேதனையில் ஈஸ்வரி, பாக்யாவின் மடியில் படுத்து ராமமூர்த்தியின் உடைய பழைய நினைவுகளை பகிர்ந்து இருந்தார். பாக்கியா ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். பின் இனியா தன்னுடைய தாத்தாவை பற்றி பேசி அழ, எழில் சமாதானம் செய்து அனுப்பி விட்டு தனியாக நின்று வருத்தப்படுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், தாத்தா தன் சாரில் உட்கார்ந்து இருப்பது போல எழில் பார்த்து வருத்தப்படுகிறார்.
இன்றைய எபிசோட்:
அதற்குப் பின் பாக்கியா வரும்போதும் ராமமூர்த்தி உட்கார்ந்திருப்பது போல பார்த்து கதறி அழுகிறார். மறுநாள் ராமமூர்த்தியின் அஸ்தியை வாங்க செழியன்,எழில் போகிறார்கள். அப்போது கோபி, ராதிகாவும் மயானத்திற்கு போனார்கள். எழில் அஸ்தியை வாங்கி வந்த பிறகு, கோபி தன்னுடைய அப்பாவின் அஸ்தியை கேட்டு வாங்கிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் இந்த நிலைமையில் ஜெனியை இங்கு விட விருப்பம் இல்லை. எங்கள் வீட்டிற்கு அழைத்து செல்கிறோம் என்று ஜெனி அப்பா- அம்மா பேச, எல்லோருமே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஜெனி மட்டும் நான் இந்த நிலைமையில் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.