ராமமூர்த்தியை பற்றி கோபி சொன்ன வார்த்தையால் கொந்தளித்த ஈஸ்வரி, பாக்கியா செய்தது என்ன?- பாக்கியலட்சுமி

0
234
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் பரிதவித்து இருந்தது. ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது இருந்தார்கள். கடந்த வாரம், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி இருந்தார். ஆனால் ஈஸ்வரி, நீ செய்யக்கூடாது என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை எல்லாம் செய்தார்.

-விளம்பரம்-

கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். மறுநாள் ராமமூர்த்தியின் அஸ்தியை செழியன், எழில் வாங்கி வந்து கங்கையில் கரைத்தார்கள். கோபி, ராதிகாவும் மயானத்திற்கு போயி அஸ்தியை வாங்கி கரைத்தார். எல்லா சடங்குகளையும் எழில், செழியன் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்கள். மேலும், ராமமூர்த்தியை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது எல்லோருமே வீட்டில் தங்களுடைய அடுத்த வேலைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

உடனே பாக்கியா, ஈஸ்வரிக்கு நெத்தியில் பொட்டு வைத்து, நீங்கள் இப்படி இருந்தால் தான் மாமாவுக்கு பிடிக்கும் என்று சொல்கிறார். மறுநாள் செழியன்- எழில் வாக்கிங் போகும்போது கோபியும் வாக்கிங் சென்றிருந்தார். அவர்கள் பெரிதாக அவரிடம் பேசவில்லை. மேலும், ராமமூர்த்தியின் துணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் கடிதம் எழுதி வைத்த விஷயம் தெரிகிறது. பின் எல்லோரையுமே ஹாலில் வரவைத்த ஈஸ்வரி, செழியனிடம் உயிலை கொடுத்து படிக்க சொல்கிறார்.

நேற்று எபிசோட்:

அதைக் கேட்டு அனைவருமே கண் கலங்குகிறார்கள். பின் ஒவ்வொருவருக்கும் எழுதிய கடிதத்தை எடுத்துப் படிக்கிறார்கள். ஈஸ்வரி, ராமமூர்த்தியின் கடிதத்தை படித்து மனம் உடைந்து அழுகிறார். பின் பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் ராமமூர்த்தி பேசியிருக்கிறார். அதைப் படித்து பார்த்து தேம்பி அழுதார். நேற்று எபிசோடில், ராமமூர்த்தி எழுதிய கடிதத்தை செழியன் படித்தார். அதற்குப் பின் அமிர்தா- எழில் பற்றி ராமமூர்த்தி எழுதியிருக்கும் கடிதத்தை படித்தார்கள். கடைசியாக இனியா தன் தாத்தா எழுதிய கடிதத்தை படித்தார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

மேலும், கடிதத்தை படித்து முடித்து எல்லோரும் வருத்தப்பட்டு அழ, இதையெல்லாம் வாசலில் நின்று ராமமூர்த்தி பார்த்தார். இன்னொரு பக்கம் கோபி, பாரில் நிலைமை தெரியாத அளவிற்கு குடித்து விட்டு உளறுகிறார். பின் ராதிகா வந்து கோபியை அழைத்துச் சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் அமிர்தா- எழில் இருவரும் கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்பட்டார்கள். அதற்கு எழில், தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி விட்டு நான் வருகிறேன் என்று சமாதானம் செய்துவிட்டு சென்றார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ராமமூர்த்தியின் உருவப்படத்திற்கு பாக்கியா குடும்பம் மரியாதை செலுத்தி இருந்தார்கள். அப்போது வந்த கோபி, தன்னுடைய அப்பாவின் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, என்னுடைய பிள்ளைகளுக்கு நான் நல்லா அப்பாவாக இருக்கிறேன். ஆனால், என்னுடைய தந்தை எனக்கு ஒரு நல்ல அப்பாவாக இருந்ததில்லை என்று சொன்னவுடன் ஈஸ்வரி, பாக்கியா இருவருமே கோபப்படுகிறார்கள். அதற்கு பின் பாக்கியா, நீங்கள் எப்போதுமே ஒரு நல்ல தந்தையாக இல்லை என்று கோபியிடம் சொல்கிறார். உடனே கோபி கோபப்படுகிறார்.

Advertisement