திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றுள்ள கோபி-ராதிகா. ஆமா, அங்க பாக்கியா என்ன பண்றாங்க ?

0
241
baakiya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள எல்லா பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி வேற லெவலில் எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம், சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான்.

- Advertisement -

சீரியலின் கதை:

சீரியலில் பாக்கியா கோபியிக்கு விவாகரத்து கொடுத்து விடுகிறார். கோபியின் மொத்த குடும்பமே பாக்கியா மீது கோபமாக இருக்கிறது. கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று, என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று நாடகமாடுகிறார். பொய்யான காரணங்கள் சொல்லி ராதிகாவின் மனதை மாற்றி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைக்கிறார். ராதிகாவின் வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள். கோபி தன்னுடைய அம்மாவிடம் ராதிகாவை திருமணம் செய்ய போகும் தகவலை சொல்கிறார். இதனால் ஈஸ்வரி மனமடைந்து வீட்டில் தன்னுடைய கணவரிடம் புலம்புகிறார்.

கோபி-ராதிகா திருமணம்:

எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கோபியின் அப்பா முடிவு எடுக்கிறார். இன்னொரு பக்கம், பாக்கியா தனக்கு கிடைத்த முதல் காண்ட்ராக்டில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடுகிறார். ஆனால், தன் கணவருக்கு தான் இரண்டாம் திருமணம் நடைபெறுகிறது என்று தெரியாமல் அந்த மண்டபத்திலேயே பரபரப்பாக பாக்கியா சமைத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் திருமணத்திற்காக கோபி- ராதிகா இருவரும் தயாராகி இருக்கிறார்கள். மண்டபத்திற்கு வந்த கோபியின் தந்தை சண்டை போடுகிறார்.

-விளம்பரம்-

உண்மையை அறிந்த இனியா-ஈஸ்வரி:

பின் தன் தந்தையிடம் கோபி சண்டை போட்டு அவரை பிடித்து தள்ளி விடுகிறார். அந்த மனவேதனையிலேயே கோபியின் அப்பா வீட்டிற்கு வருகிறார். பின் சமையல் ஆர்டரை கேன்சல் செய்ய நினைக்கிறார்கள். இருந்தும், பாக்கியம் மண்டபத்தின் முதலாளியிடம் பேசி அந்த ஆர்டரை செய்கிறார். இந்நிலையில் சீரியல் குறித்த புரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, கோபியின் அப்பா ராமமூர்த்தி தன்னுடைய மனைவி ஈஸ்வரியிடம் இன்று தான் கோபிக்கு திருமணம் என்று உண்மையை போட்டு உடைக்கிறார்.

சீரியல் குறித்த ப்ரோமோ:

இதனால் அதிர்ச்சி அடைந்த இனியாவும் ஈஸ்வரியும் எப்படியாவது கோபி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கிளம்புகிறார்கள். இன்னொரு பக்கம், மணமேடையில் கோபி ராதிகா இருவரும் மனக்கோளத்தில் இருக்கிறார்கள். பாக்யா சமைத்துக் கொண்டிருக்கிறார். கோபி, ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் கோபியின் அம்மா ஈஸ்வரி, ராமமூர்த்தி, இனியா மூவரும் உள்ளே வருகிறார்கள். இறுதியில் கோபி- ராதிகா திருமணம் நடந்ததா? ஈஸ்வரி, இனியா கோபியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்களா? அடுத்து என்ன என்ற பரபரப்பின் உச்சத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தற்போது திருமணத்தை முடித்த கோபி ஹனிமூனிற்காக கொடைக்கானல் சென்றிருப்பதாக தெரிகிறது. அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் வர மெகா சங்கமம் காட்சிகள் படமாக்கப்படவுள்ளனவாம். அந்த புகைப்படத்தில் ராதிகாவுடன் பாக்கியாவும் இருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் பாக்யாவும் அந்த ஹனிமூனுக்கு சென்று இருப்பது தான் என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement