சீரியலில் இரண்டு பேரை ஓட்டிக்கொண்டு வரும் கோபியின் உண்மையான மனைவி யார் தெரியுமா ? இதோ அவரே பகிர்ந்த புகைப்படம்.

0
1415
Gopi
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் உண்மையான மனைவியின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
gopi

இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்தே இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. இந்த சீரியல் மூலம் பாக்கியாவிற்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது. மேலும், சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதிலும் கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான்.

சீரியலின் கதை:

அதாவது, கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கோபி குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிந்து விட்டது. கோபி காதலிக்கும் நபர் ராதிகா என்ற உண்மை பாக்கியாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி விட்டார். கோபி வீட்டில் புயல் அடித்தது போல் இருக்கிறது. ஆனால், கோபி எப்படியாவது ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அதேசமயம் ராதிகா மும்பை செல்ல முடிவு செய்கிறார்.

-விளம்பரம்-

சீரியலில் வரும் திருப்பங்கள்:

தற்போது சீரியலில் பாக்கியா, கோபிக்கு விவாகரத்து கொடுக்க தயாராகி நீதிமன்றம் செல்ல முடிவெடுத்து விட்டார். அதே போல் கோபியும் பாக்கியாவிற்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்கு செல்கிறார். இதனால் கோபியின் மொத்த குடும்பமே கதிகலங்கி நிற்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கோபி சதீஷின் நிஜ மனைவி புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

சதீஸ் மனைவி புகைப்படம்:

பாக்கியலட்சுமி தொடரின் மூலம் கோபியை திட்டித் தீர்க்கும் ஒரு கும்பல் இருந்தாலும் எங்கள் தலைவன் கோபியை யாராலும் அசைக்க முடியாது என ஜாலியாக கூறும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் மனைவி, காதலி என்று சீரியலில் கோபி விளையாடினாலும் நிஜத்தில் அவருக்கு ஒரு அழகான மனைவி இருக்கிறார். தற்போது சதீஸ் தன்னுடைய அழகான மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.இவருடைய பெயர் கீதா விஜயன். இவர் மலையாள சினிமாவில் நடித்து வருகிறார்..

Advertisement