ரசிகர்களிடம் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி வைத்திருக்கும் வேண்டுகோள் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
தற்போது சீரியலில் ராதிகா கர்ப்பம் கலைந்துவிட்டது என்று அவருடைய அம்மா ஈஸ்வரி மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்திருந்தார்கள். பின் விசாரணையில் ராதிகா, கோபி இருவருமே சொன்ன வாக்குமூலம் ஈஸ்வரிக்கு எதிராக இருந்தது. இதனால் ஈஸ்வரி சிறைக்கு செல்வார் என்று கமலா நினைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து ராதிகாவின் மகள் மயூ சாட்சி சொல்ல வந்தார். இவர் நீதிமன்றத்தில், அம்மா பூ ஜாடி தடிக்கு தான் கீழே விழுந்தார். ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை.
சீரியல் ட்ராக்:
அவர் காப்பாற்றத்தான் சென்றார் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து நீதிமன்றமும் ஈஸ்வரியை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து விட்டது. இதற்குப் பிறகு கோபி- ராதிகா இடையே விரிசல் ஏற்படுமா? ராதிகா என்ன செய்யப் போகிறார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
நெட்டிசன்கள் ட்ரோல்:
மேலும், பாக்கியலட்சுமி சீரியலில் இருக்கும் கோபியை சோசியல் மீடியாவில் பயங்கரமாக திட்டி தீர்த்து வருகிறார்கள். இதனாலே இவர் மனவேதனையில் கடந்த ஆண்டு சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இருந்தாலும் இவர் மீது பாசம் வைத்திருக்கும் ரசிகர்களுக்காக மீண்டும் இவர் நடிப்பதாக ஒத்துக் கொண்டார். இருந்தும் இவரை பயங்கரமாக திட்டிக் கொண்டுதான் வருகிறார்கள். அதுவும் கடந்த சில மாதங்களாக கோபியை மோசமான வார்த்தையால் பேசி கோபி கதாபாத்திரத்தை ட்ரோல் செய்தும் இருக்கிறார்கள்.
கோபி பதிவிட்ட வீடியோ:
இந்த நிலையில் இது தொடர்பாக கோபி சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நண்பர்களே! நான் கோபியை திட்ட வேண்டாம் என்றும், இப்படி திட்டுங்கள், இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று சொல்லவில்லை. அது உங்களுடைய உரிமை. ஆனால், தகாத முறையில் பேசாதீர்கள், கெட்ட வார்த்தையில் திட்டாதீர்கள். இதைத்தான் நான் வேண்டுகோளாக வைக்கிறேன். இது புரிந்தவர்களுக்கு புரியும் நன்றி என்று கூறி இருக்கிறார்.