முதன் முறையாக சமீபத்தில் பிறந்த தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி ஜெனிபர்.

0
252
jeni
- Advertisement -

முதல் முறையாக தன்னுடைய இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார் ஜெனிஃபர். பொதுவாகவே சமீப காலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று வருகிறது. கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சீரியலை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-
நானே சொல்கிறேன்.. அதுவரைக்கும் நம்பாதீங்க.. பாக்கியலட்சுமி ஜெனிஃபர்  விளக்கம் | Why I left Baghyalakshmi serial, Jennifer explains - Tamil  Oneindia

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக இந்த தொடர் திகழ்கின்றது. இது குடும்ப பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. மேலும், இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அந்த வகையில் தற்போது இந்த தொடரில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். இதனால் பள்ளி மாணவி ஒருவர் வீட்டில் சொல்வதற்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிறார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அந்த பெண் தேர்வுக்குப் பயந்துதான் இந்தமாதிரி தவறான முடிவு எடுத்துவிட்டார் என்று ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் பொய்யான தகவலை கூறுகிறார்கள்.

jeni

ஜெனிபர் நடித்த சீரியல்கள்:

பிறகு பாக்கியலட்சுமி தனியாக போராடி அந்த பெண்ணுக்கு நியாயம் வாங்கி தருகிறார். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் ஜெனிபர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான்.

-விளம்பரம்-

ஜெனிபர் பதிவிட்ட குழந்தை புகைப்படம்:

மேலும், ஜெனிபர் சின்னத் திரைக்கு வருவதற்கு முன்பு வெள்ளித்திரையில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் மிகச் சிறந்த டான்சர் ஆவார். அதோடு பல நடன நிகழ்ச்சியில் ஜெனிபர் பங்கேற்று இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனிபர் விலகி இருந்தார். அதற்கு காரணம் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் தான் ஜெனிர்க்கு, ஆண் குழந்தை பிறந்து இருந்தது. ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் ஜெனிபருக்கு தற்போது இரண்டாவதும் மகன் பிறந்து இருக்கிறார்.

குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் ஜெனிபர்:

மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து இருந்தார். அது மட்டுமில்லாமல் தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தையும் ஜெனிஃபர் சோசியல் மீடியாவில் பகிர்ந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த நிலையில் இவர் முதன்முதலாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். ஜெனிபர் தனது குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் படியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்திற்கு பலரும் லைக் செய்தும் வாழ்த்துக்களை கூறியும் வருகின்றனர்.

Advertisement