‘கர்ப்பமாக இருக்கும் ஜெனியால் கேலிக்கு உள்ளான பாக்கியலட்சுமி தொடர்’ – பின்ன ஒரு லாஜிக் வேண்டாமா.

0
3987
Jeni
- Advertisement -

பாக்யலட்சுமி சீரியலை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

தற்போது சீரியலில் இனியா-பாக்கியா கல்லூரி ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. அதாவது, இனியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 600க்கு 596 மதிப்பெண் வாங்கி இருக்கிறார். இதனால் பள்ளியில் இனியாவிற்கு பாராட்டு விழா நடைபெற்று இருக்கிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் இனியாவை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். இதை பார்க்க பாக்கியாவால் வரமுடியாமல் போகிறது. இதை அறிந்த கோபி இனியாவை தன் பக்கம் இழுக்க பார்க்கிறார்.

சீரியலின் கதை:

மேலும், இனியாவிற்கு மீடியா சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், கோபி அவரை பிசினஸ் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்று சொல்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரும் இனியாவின் விருப்பத்திற்கு தான் ஓகே சொல்கிறார்கள். இதனால் கல்லூரியில் இனியாவை சேர்க்க பாக்கியா செல்கிறார். வெற்றிகரமாக இனியாவை விருப்பப்படி கல்லூரியில் சேர்த்து விடுகிறார்.அதில் பாக்யா எழியிடம் கல்லூரி படிப்பது குறித்து பேசுகிறார்.

-விளம்பரம்-

பாக்கியாவின் கனவு:

அங்கு கல்லுரியில் படிக்க பாக்கியா ஆசைப்படுகிறார். அதற்கு எழில் உதவி செய்கிறார். பின் இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் பாக்கியம் சொல்கிறார். இதனால் அனைவரும் பாக்கியா கல்லூரிக்கு செல்ல சம்மதம் சொல்கிறார்கள். ஆனால், இனியாவிற்கு மட்டும் இதில் விருப்பமில்லை. இதை அவர் கோபியிடம் சொல்ல வழக்கம்போல் கோபி புலம்புகிறார். கோபி, பாக்கியாவிடம் சண்டை போடுவாரா? இனியாவிற்கும் பாக்யாவிற்கும் பிரச்சனை வருமா? பாக்கியா தன்னுடைய கனவை நிறைவேற்றுவாரா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

சீரியலை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

இந்த நிலையில் சீரியலில் செழியனின் மனைவி ஜெனி கர்ப்பமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இனியா பத்தாவது படிக்கும்போதே ஜெனி கர்ப்பமாக இருந்ததாக சீரியலில் சொல்லியிருந்தார்கள். தற்போது இனியா 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். ஆனாலும், ஜெனிக்கு பிரசவம் ஆகவில்லை. இதனால் நெட்டிசன்கள் பலரும் இயக்குனர் இதை கவனிக்க மறுத்துவிட்டாரா? பல வருடங்களுக்கும் மேலாக ஜெனி மாசமாக இருக்கிறார்? என்றெல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement