விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி ' சீரியலில் நடனப் போட்டியில் இனியா நன்றாக ஆடி இருந்தார். சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து போட்டியாளர்களில், இனியாவும் செலக்ட் ஆகி இருந்தார். இதைக் கேட்டவுடன் அனைவரும் சந்தோஷப்பட்டு இனியாவை எல்லோரும் பாராட்டி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கோபி வைத்த நபர், பாக்யாவின் ஆர்டரை கெடுக்க திட்டம் போடுகிறார். பாக்கியா, நானே ஆர்டரை பார்த்துக் கொள்கிறேன் என்று என்று அவரை அனுப்பி விட்டார்.

பின் பாக்கியா, தான் சமைக்கும் இடத்திற்கு ஈஸ்வரியை அழைத்தார். ஆனால், அவர் வர மறுத்தார். இருந்தும் பாக்கியா விடாமல் ஈஸ்வரியை கட்டாயப்படுத்தி ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்றார். நேற்று ஈஸ்வரி விளக்கேற்றுவதற்கு அவர் மனதை காயம்படும் அளவிற்கு பேசி இருந்தார்கள். இதைக் கேட்ட பாக்யா கோபப்பட்டு, என் அத்தையை யார் பேசினாலும் நான் சும்மா விட மாட்டேன். என் மாமியார் தான் செய்ய வேண்டும் என்று அவர்கள் வாயை அடைத்து விட்டு ஈஸ்வரியை விளக்கேற்றி வைக்க சொன்னார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
இந்த ஆர்டரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று புது செப் சதி வேலைகள் செய்கிறார்.
இன்னொரு பக்கம் பணம் இல்லாததால் வீடு செலவிற்கு ரொம்பவே அமிர்தா- எழில் கஷ்டப்படுகிறார்கள். உடனே அமிர்தாவின் அம்மா, உங்களிடம் பணம் இல்லையா? நான் வாங்கி தரட்டுமா? என்று கேட்க, அதெல்லாம் வேண்டாம் என்று அமிர்தா சமாளிக்க. எழில், எப்படியோ பணத்தை ரெடி பண்ணி வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வந்தார்.

நேற்று எபிசோட்:
மேலும், நேற்று எபிசோட்டில் பாக்கியா தன்னுடைய புதிய ஆர்டர் கான வேலைகளை சிறப்பாக முடித்து விடுகிறார். இதை எப்படியாவது சொதப்ப வேண்டும் என்று செப் நினைத்து சில வேலை செய்தார். பின் வந்த ஆர்டர்களை எல்லாம் பாக்கியா நல்லபடியாக முடித்து அனுப்பி விட்டார். ரெஸ்டாரண்டிலும் பயங்கர கூட்டமாக இருந்தது. அப்போது ஒருவர், சாப்பாடு எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று கடையில் சாப்பாட்டை கொட்டி ஒரே பிரச்சனை செய்தார். இவரை தொடர்ந்து அன்று சாப்பாடு வாங்கிய எல்லோரும், கெட்டு போன சாப்பாடு என்று பாக்யாவிடம் சண்டைக்கு போனார்கள்.

சீரியல் ட்ராக்:
பாக்யாவிற்கு என்ன நடக்கிறது? என்ன சொல்வது? என்று புரியாமல் இருந்தார். ஆனால், அந்த செப் மட்டும் சந்தோஷத்தில் கோபிக்கு நடப்பதை அப்டேட் செய்து கொண்டிருந்தார். உடனே கோபி, பாக்யா ரெஸ்டாரண்ட்டுக்கு வெளியே நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். சோசியல் மீடியா, பிரஸ், உணவுத்துறையிலிருந்து எல்லோருமே பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வந்து விவாதம் செய்தார்கள்.
பின் உணவுத்துறையினர் பாக்யாவின் ரெஸ்டாரண்டை சோதனை செய்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் உண்மையறிந்து ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே பதட்டப்படுகிறார்கள்.
https://youtu.be/Dn_yJ5qlRoQ?si=3cyvNMTc4z8caeJ5
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் மக்கள் எல்லோருமே ஆவேசமாக கொந்தளித்து கத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் பாக்யாவையே அடிக்கப் போகிறார்கள். அப்போது செழியன்- எழில் இருவரும் அதை தடுத்து சமாதானம் செய்யப் பார்க்கிறார்கள். ஆனாலும் முடியவில்லை. மக்கள் ரொம்ப ஆவேசத்தில் கத்துகிறார்கள். இன்னொரு பக்கம் உணவு துறையினர் சாப்பாட்டை சோதித்துப் பார்த்து கலப்படம் இருக்கிறது. கெட்டுப் போன சிக்கனில் சமைத்து இருக்கிறீர்கள் என்று சொல்லி ரெஸ்டாரண்டையே இழுத்து மூடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து கோபி சந்தோஷத்தில் இருக்கிறார்.






