தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். மேலும், விஜய் அவர்கள் ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். இதை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள்.

பின் தேர்தலின் முடிவுகள் வெளியானது. 75 வருட திமுக, 50 வருட அதிமுக என எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருக்கிறது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் ஒரு தனி மனிதன் தேர்தலில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம் என்று எல்லோருமே பாராட்டி வருகிறார்கள்.
விஜய் வெற்றி:
இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதை அடுத்து பெரும்பான்மை ஆக 118 சீட்டுகள் இருந்தால் மட்டும்தான் முதலமைச்சராக முடியும் என்று ஆளுநர் கூறியிருந்தார். இதை அடுத்து விஜய் அவர்கள் வெற்றி பெற்ற மற்ற கட்சிகளிடம் கூட்டணிக்கு கேட்டிருந்தார். தற்போது பெரும்பான்மையாக 118 எம் எல் ஏக்கள் உயர்ந்துள்ளது. இதனால் நாளை விஜய் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க இருக்கிறார்.

சதிஷ் வீடியோ:
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவில், அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்கனுமா? ரவுடியாக இருக்கணுமா? தவறு செய்திருக்கனுமா? நல்ல மனசு இருந்தாலே
மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பது தான் உண்மையான தகுதி. ஜாதி மதம் இனம் போன்ற வேறுபாடுகளை பார்க்காமல் எல்லோருக்கும் நல்லது செய்யும் எண்ணமே ஒரு தலைவருடைய பெரிய குணம்.
இதுவரை நான் இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்களித்து வந்திருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=BXNX7HyXkXg
விஜய் பற்றி சொன்னது:
அது கட்சிக்காக அல்ல எம்ஜிஆர் மீது இருந்த மரியாதைக்காக போட்டேன். ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில் தனியாக நிற்கும் ஒரு இளைஞன் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாகி இருக்கிறது. இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பது போன்ற தகவல் எல்லாம் வந்தது வேதனையாக இருந்தது. மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும். விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். அவர் நல்ல ஆட்சி செய்யவில்லை என்றால் மக்கள் அதற்கு பிறகு தீர்மானிக்கட்டும். ஜோசப் விஜய் ஐ லவ் யூ, நீங்க நல்லா வருவீங்க. ஆல் த பெஸ்ட் என்று கூறி இருக்கிறார்.






