இந்தியன் 2 படத்தில் இந்த நடிகரோட மனைவியா நடிச்சிருக்கேன் – பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி.

0
47592
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “ஸ்ரீமோய் ’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல் தமிழில் மட்டுமல்ல கன்னட, மராத்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஹிந்தியிலும் ஒளிபரப்ப படுகிறது. இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.

- Advertisement -

லட்சுமி வந்துச்சி, சுமங்கலி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாக்கியலட்சுமி தொடர் தான். இந்த தொடர் மூலம் கிடைத்த பிரபலத்தால் தற்போது இவருக்கு இந்தியன் 2 படத்தில் நடக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

வீடியோவில் 6 : 55 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் என்று பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ள திவ்யா கணேஷ், இந்த படத்தில் முதலில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய ரோல் தான் பண்ணியுள்ளேன். படப்பிடிப்பிற்கு போன பின்னர் தான் தெரிந்தது நான் பாபி சிம்ஹாவின் மனைவியாக நடிக்கப்போகிறேன் என்று தெரிந்து என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement