என் மகள் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டதே கிடையாது – கோபத்தில் ‘பாக்கியலட்சுமி’ இனியாவின் ரியல் அம்மா

0
202
- Advertisement -

‘பாக்கியலட்சுமி’ இனியாவின் நடனம் குறித்து விமர்சனங்களுக்கு நேகாவின் அம்மா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் டான்ஸ் காம்பெடிஷன் நடைபெற்றது. இதில் இனியா கலந்து கொண்டு நடனமாடி இருந்தார். ஒவ்வொரு சுற்றிலுமே இனியா நடனமாடி அடுத்த கட்டத்திற்கு சென்றார். இறுதியாக இவர் பைனல் சுற்றுக்கும் வந்தார். ஆனால், பைனல் சுற்றின் போது கோபி செய்த சில வேலையால் இனியா மனம் உடைந்து இருந்தார். இதனால் அவர் தோற்று மூன்றாம் பரிசு வாங்கிவிட்டார். இதற்கு காரணம் ராதிகா தான் என்று இனியா பயங்கர கலவரம் செய்து இருந்தார். அதோடு அவர், நான் முதல் பரிசு வாங்க வேண்டியவர் என்றெல்லாம் சொல்லி இருந்தார். உடனே நெட்டிசன்கள், அவருடைய முதல் மற்றும் கடைசி நடனத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.

இனியா டான்ஸ்:

கடந்த சில வாரங்களாகவே இனியாவின் இந்த நடன வீடியோ தான் இணையத்தில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதையெல்லாம் பார்த்து கடுப்பான நேகாவின் அம்மா, குழந்தையிலிருந்து என் மகள் நடித்துக்கொண்டு வருகிறார். அவள் ஒரு காட்சியில் நடித்துவிட்டு வந்து இவ்வளவு பீல் பண்ணி நான் பார்த்ததே கிடையாது. சமூக ஊடகங்களில் பேசுவதற்கு வேறு விஷயமே இல்லையா? எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது, அதற்கு சொல்யூஷன் தேடலாம். அதை விட்டுட்டு ஒரு சீனுக்கு இப்படி எல்லாம் நேரம் செலவழித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரசித்தால் கூட பரவாயில்லை.

-விளம்பரம்-

நேஹா அம்மா பேட்டி:

காமெடி நடிகர் நடிகைகள் மத்தவர்களை சிரிக்க வைப்பதற்காக தங்களையே கலாய்ச்சிட்டு இருப்பார்கள். ஆனால், இது அந்த மாதிரி கூட இல்லாமல் கலாய்க்கிறோம் என்ற பெயரில் எல்லை மீறி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவள் சின்ன வயதில் இருந்தே கொஞ்சம் கொழுகொழு என்று இருப்பாள். இந்த மாதிரி கிண்டல் கேலிகளை நிறையவே அவள் எதிர்கொண்டிருக்கிறார். பள்ளிப்பருவத்தில் கூட இவள் இந்த மாதிரி நிறைய கிண்டல் கேலி சந்தித்திருக்கிறார். ஆனால், அதை பிரித்தாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்ப வருகிற கமெண்ட்களை படிக்க ஆரம்பித்தாலே மன அழுத்தத்திற்கு ஆளாகிடுவோம் என்று தோன்றுகிறது.

விமர்சனங்களுக்கு பதிலடி:

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லணும். எந்த நடனத்துக்கு எந்த காஸ்ட்யூம் போடணும் என்று அறிவெல்லாம் எங்களுக்கு இருக்கு. ஆனால், சீரியலில் நடிக்கப் போன பிறகு அவர்கள் சொல்லும் ஆடை தான் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இந்த மாதிரி காட்டினால் தான் சீரியல் ரேட்டிங் கிடைக்கணும் என்று நினைத்தார்களா என்று புரியவில்லை. அவர்களிடம் போய் நான் இப்படி உடை போட்டு நடிக்க முடியாது என்று சொல்ல முடியாது. காரணம், சீரியல் சீக்கிரமாகவே முடியப்போகிறது என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் தேவையில்லாமல் சங்கடம் வேண்டாம் என்று என் மகள் சொல்லிவிட்டார். அதனால் தான் அதைப் பற்றி நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்த விமர்சனத்தால் அவள் ரொம்பவே அப்செட் ஆகி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement