விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டிக்கு சென்று இருந்தது மிக பெரிய பிரச்சனை ஆகி இருந்தது. ராதிகா தான் இனியாவை காப்பாற்றி இருந்தார். பின் இதை அறிந்த வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். கடந்த வாரம், கல்லூரியில் பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகம் சொல்லி இருந்தது.
இதனால் பாக்கியா கல்லூரிக்கு போய் இருந்தார். கல்லூரியில், இனியாவுக்கு டிசி கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா மன்னிப்பு கேட்க, அப்போது பிரின்சிபால் இனியா அப்பா வரவேண்டும் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, அவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு போய்விட்டான் என்று கோபமாக சொல்லி இருந்தார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வந்து ஈஸ்வரியிடம் கேட்டு சண்டை போட்டு இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி அழுது இருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
கடைசியில் அவர், இறந்து போக முடிவு எடுத்து கடிதம் எழுதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே போக பார்த்தார். அதை பார்த்த பாக்கியா, கடிதத்தை படித்து பார்த்து அதிர்ச்சி ஆகி இனியாவை திட்டி அழுதார். இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன் என்று இனியாவும் சொல்கிறார். இந்த வாரம் எபிசோடில் கோபத்தில் ராதிகா, எதற்கு தான் உங்களை திருமணம் செய்து கொண்டேனோ? என புலம்ப, உடனே கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று சொல்ல, விவாகரத்து கொடுத்து விட்டு நிம்மதியாக உன் குடும்பத்துடனே போய் சேருங்கள் என்று ராதிகா சொன்னார்.
சீரியல் கதை:
பின் கோபி தன் நண்பனை பார்க்க சென்று விட்டார். நேற்று எபிசோடில் பாக்கியா, வீட்டில் நடந்தை பழனிச்சாமி இடம் சொல்ல, அவர் ஆறுதலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எழிலுக்கு சரியான வேலை இல்லை என்று ஈஸ்வரி திட்டி இருந்தார். இன்றைய எபிசோடில் எழில், சினிமா வாய்ப்பு தேடி ஒரு கம்பெனிக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரைப் பற்றி தெரிந்து கொண்டு வாய்ப்பு தர முடியாது என்று மறுத்து விடுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் செழியன், தனக்கு புதிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.
இன்றைய எபிசோட்:
பின் தன்னுடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுக்கிறார். அந்த சமயம் பார்த்து எழில் வீட்டுக்கு வருகிறார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி எழிலை பயங்கர மோசமாக திட்டி விடுகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில், செழியன் வீட்டு செலவிற்காக பாக்கியாவிற்கு பணம் கொடுக்கிறார். ஆனால், நீ இன்னமும் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. சினிமாவை தூக்கி போட்டுவிட்டு ஒரு வேலைக்கு போய் குடும்ப செலவை பார் என்று மோசமாக பேசி திட்டி விடுகிறார்.
சீரியல் ப்ரோமோ:
இன்னொரு பக்கம் செனி, நீ ஆன்ட்டிக்கு காசு கொடுத்தால் தனியாக போய் கொடு. எல்லோர் முன்னாடியும் கொடுக்காதே, எழில் பாவம் என்று அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்க ஜெனிக்கு வாந்தி வந்து விடுகிறது. பின் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று ஜெனி சொல்ல, இதை கேட்டு ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்படுகிறார். அந்த சமயம் அங்கு வந்த அமிர்தாவை பார்த்து, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என ஆவேசமாக ஈஸ்வரி பேசுகிறார். இதைக்கேட்டு அமிர்தா ரொம்பவே அழுகிறார்.