விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா சமையலை பார்த்தவுடன் எல்லோருமே ஷாக் ஆனார்கள். கோபியால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடனே ஈஸ்வரி, இதெல்லாம் ஒரு சாப்பாடா? உடம்பு முடியாதவனுக்கு இது தருவதா? என்று கேட்க, ராதிகாவுக்கு கோபம் அதிகமானது. மையூ, கோபி வேறு வழியில்லாமல் சாப்பிட்டார்கள். பின் பாக்கியா, பொங்கல் ஆப்பர் போட்டு விடலாம் என்று பேசி இருந்தார். அதற்கு ராதிகா, என்ன ஆப்பர் போடுகிறீர்கள்? என்று கேட்க, உடனே ஈஸ்வரி, ராதிகா சமையலை பற்றி வம்பு இழுத்தார்.

இதனால் ராதிகா- ஈஸ்வரி இடையே வாக்குவாதம் அதிகமானது. அப்போது ஈஸ்வரியை தனியாக அழைத்து சென்ற ராதிகா, என் விஷயத்தில் தலையிட்டால் அவ்வளவு தான் என்று மிரட்டி இருந்தார். ஈஸ்வரியால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் கோபி வந்தவுடன் பேச்சை மாற்றி அங்கிருந்து வந்தார் ராதிகா. பின் ரூமிற்கு வந்த ராதிகா, நம் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள் என்றார். கோபியும் ஒத்து கொண்டார். அதற்குப்பின் ஈஸ்வரி, ராதிகா தன்னை மிரட்டியதை பற்றி பாக்கியாவிடம் சொன்னார். ஆனால், பாக்கியா அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, கோபியை வாக்கிங் போகலாம் என்று அழைத்தார். அப்போது ராதிகா, நான் அழைத்துப் போகிறேன் என்று சொன்னார். ஈஸ்வரி தடுத்துமே ராதிகா கேட்கவில்லை. பின் ராதிகா- கோபி இருவரும் வாக்கிங் போனார்கள். ஆனால், வேகமாக கோபியால் நடக்க முடியவில்லை. அவர் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டார். பின் பாக்கியாவை பார்த்தவுடன் ராதிகா சேர்ந்து நடந்தார். கோபி உட்கார்ந்து இருப்பதை பார்த்த ஈஸ்வரி, ராதிகாவை பற்றி கோல் மூட்டி கொண்டு இருந்தார். பின் வீட்டிற்கு வந்த கோபி, மையூவிற்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் இனியாவுக்கு கோபம் வந்தது.

நேற்று எபிசோட்:
உடனே அவர், தன்னுடைய அப்பாவிடம் கல்லூரியை பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஆனால், கோபி மையூவுக்கு பாடம் சொல்லி கொடுத்தார். இதனால் ஈஸ்வரி-இனியாவுக்கு கோபம் வந்து கத்தினார்கள். ஆத்திரத்தில் ஈஸ்வரி, மையூவை மோசமாக பேசி விட்டார். இதை பார்த்தவுடன் ராதிகா, தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு போய் பாடம் சொல்லித் தந்தார். கோபியும் இப்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள் என்று தன்னுடைய அம்மாவிற்கு அறிவுரை சொல்லிவிட்டு போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபியை ஹாஸ்பிடலுக்கு ராதிகா அழைத்துப் போக வருகிறார். உடனே ஈஸ்வரி, நான் என் மகனை அழைத்து போகிறேன் வேண்டாம் என்று தடுக்கிறார். ஆனால், ராதிகா கேட்கவில்லை. இதனால் ராதிகா- ஈஸ்வரிக்கு இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்படுகிறது. இதையெல்லாம் பார்த்து பாக்யா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். கடைசியில் கோபி இருவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து போகிறார். அங்கு டாக்டரை பார்க்க ராதிகா போகிறார். உடனே ஈஸ்வரி நான் தான் போவேன் என்று தடுக்க, அங்கேயும் இருவரும் சண்டை போடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
ஒரு வழியாக ராதிகா தான் கோபியை அழைத்துக்கொண்டு உள்ளே போகிறார். இதனால் ஈஸ்வரிக்கு
ஆத்திரம் தாங்க முடியவில்லை. பின் வெளியே வந்த கோபியிடம் ஈஸ்வரி விசாரிக்க, ராதிகா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கோபியை அழைத்துக் கொண்டு வருகிறார். இது எல்லாம் நினைத்து ஈஸ்வரி, பாக்கியாவிடம் புலம்பியிருக்கிறார். அதற்கு பாக்கியா, உங்கள உடம்பை பாருங்கள், சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள், அவர்களுடைய கணவரை அவர் பார்த்துக் கொள்வார் என்று சொன்னவுடன் இன்னும் ஈஸ்வரிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அப்போது பார்த்து வீட்டிற்கு வந்த கோபியிடம் ஹாஸ்பிடலில் நடந்ததை பற்றி ஈஸ்வரி கேட்டு, நான் உனக்கு முக்கியம் இல்லையா? என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






