விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, ஆகாஷை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் சென்றிருந்தார். அங்கு செல்வி, என் மகனின் நிலைமையை பார்த்தீர்களா! என்று ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருந்தார். பாக்கியாவும் செல்விக்கு ஆறுதல் சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் செலவை பார்த்துக் கொள்கிறாள். செல்வி வேண்டாம் என்றுமே பாக்கியா செய்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ஜெனி இடம் அமிர்தா, ஒருவரை அடிப்பது தவறு தானே, நீங்கள் எதற்கு ஆண்டியிடம் கோபப்பட்டீர்கள்? என்று கேட்டார். உடனே ஜெனி, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று பேச, இருவருக்கும் வாக்குவாதம் ஆனது.

அந்த சமயம் வந்த ஈஸ்வரி, அமிர்தாவை திட்டி விட்டார். உடனே பாக்கியா வந்தவுடன் எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் என்று வழக்கம் போல வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரி. அதற்குப்பின் எழில், பாக்கியா பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த செழியன் இடம் எழில் நடந்ததை பற்றி பேசி இருந்தார் ஆனால், கோபப்பட்டு செழியன் எழிலிடம் சண்டைக்கு போனார். உடனே கோபி, எழிலையும் பாக்கியாவையும் திட்டி இருந்தார். அடுத்த நாள் காலையில் எல்லோரும் அவரவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வருகிறார்கள். யாரும் எங்கும் போக வேண்டாம் என்று சொன்னார். பாக்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, இனியாவிற்கு திருமண ஏற்பாடு செய்கிறேன். மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரவைத்து இருக்கிறேன் என்று சொன்னவுடன் கோபி ஷாக் ஆனார். பின் கோபி, எதற்கு இந்த அவசர கல்யாணம் என்று கேட்டவுடன் ஈஸ்வரி, செல்விக்கு தான் பாக்கியா சப்போர்ட் செய்வார். அவள் ஆகாசை எப்படியாவது இனியாவிற்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவாள். அதற்குள் நாம் இனியாவிற்கு நல்ல வசதியான மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொன்னவுடன் கோபி ஒத்துக் கொண்டார். அதற்குப் பின் வீட்டில் உள்ள எல்லோரையும் ரெடியாகிக்கொண்டு ஈஸ்வரி வர சொன்னார்.

நேற்று எபிசோட்:
பின் மாப்பிள்ளை வீட்டில் வந்து விட்டார்கள். ஈஸ்வரி, இனியாவை அறிமுகப்படுத்தி இவர் தான் கல்யாண பொண்ணு என்று சொன்னவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. உடனே ஈஸ்வரி, நாளை நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம். கல்யாணம் படிப்பு முடிந்தவுடன் செய்யலாம் என்று சொன்னவுடன் மாப்பிள்ளை வீட்டிலும் ஒத்துக்கொண்டார்கள். பின் மாப்பிள்ளை சென்ற பிறகு பாக்கியா, என்ன நடக்கிறது இங்கு? என் மகளுக்கு எதற்கு கல்யாணம்? என்று ஆவேசப்பட்டு கேட்டார். எழில் - செழியன் இருவருமே இனியாவிற்கு சப்போர்ட் செய்தார்கள். ஆனால், ஈஸ்வரி யார் சொல்வதையும் கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, நிச்சயதார்த்தம் கண்டிப்பாக நடக்கும் என்று சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ஈஸ்வரிக்கு எதிராக தான் பேசுகிறார்கள். பாக்கியா, என் மகள் விஷயத்தில் முடிவெடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவளுக்கு திருமணம் நடக்காது என்று ஆவேசமாக கத்திவிட்டு இனியாவை அழைத்து கொண்டு செல்கிறார். ஆனால், ஈஸ்வரி-கோபி இருவரும் மட்டும் இனியாவுக்கு திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகளை செய்கிறார்கள். அதற்குப்பின் ஈஸ்வரி-கோபி இருவரும் இனியாவை தனியாக அழைத்து என்னென்னவோ கதைகளை சொல்கிறார்கள். ஆனால், இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் தன்னுடைய பாட்டி, அப்பா சொன்னதைப் பற்றி பாக்கியாவிடம் சொல்லி அழுகிறார் இனியா. உடனே பாக்கியா, எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ தைரியமாக இரு. உனக்கு இந்த கல்யாணம் நடக்காது என்று அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் பாக்கியா, செல்வியின் வீட்டிற்கு செல்கிறார். ஆகாஷ் ஹாஸ்பிடலில் இருந்து வந்து விடுகிறார். பின் பாக்கியா, செல்விக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பண உதவி கேட்கிறார். ஆனால், செல்வி வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






