விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா, ரெஸ்டாரண்டில் சுதாகர் சொன்ன விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொன்னார். ஆனால், அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. கோபி, ஈஸ்வரி, செழியன் மூவருமே சுதாகருக்கு சப்போட்டாக தான் பேசி இருந்தார்கள். ரெஸ்டாரன்ட் அவருடைய பெயரில் இருப்பது நல்ல விஷயம் தான் என்றார்கள். உடனே ஈஸ்வரி, உன் மகளுக்காக இதைக் கூட தர மாட்டாயா? நல்ல வசதியான குடும்பம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், பாக்கியா யார் சொல்வதையும் கேட்கவில்லை. அதற்கு அவர், என்னுடைய ரெஸ்டாரண்டை யாருக்காகவும் கொடுக்க முடியாது.
இதற்கு நானே முடிவெடுக்கிறேன் என்று சொன்னார். பின் இனியாவிடம் பேசிய பாக்கியா, நான் எந்த முடிவு எடுத்தாலும் உனக்கு சம்மதமா? என்று கேட்டார். இனியா, எனக்காக நீங்கள் நிறைய தியாகம் செய்துவிட்டீர்கள். இந்த ரெஸ்டாரண்டை விடாதீர்கள். கல்யாணம் நின்றாலும் எனக்கு கவலை இல்லை என்று சொன்னார். பின் கோபி, சுதாகரை சந்தித்து பேசி இருந்தார். அப்போது சுதாகர், நான் ரெஸ்டாரண்ட் பெயரை மாற்றி வைக்க தான் சொன்னேன். மற்றபடி பொறுப்பெல்லாம் அவர்கள் தான். இதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றாலும் எனக்கு பிரச்சனை இல்லை. அவர்கள் தான் தப்பாக புரிந்து இருக்கிறார்கள் என்று அப்படியே மாத்தி பேசி விட்டார்.
பாக்கியலட்சுமி:
சுதாகர், சம்மந்தி நினைக்கிற மாதிரி நான் ரெஸ்டாரண்டை நானே எடுத்துக்கொள்ள போவதில்லை. இந்த ரெஸ்டாரண்டுக்கும் திருமணத்திற்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொன்னார். கோபியும் அதை நம்பி விட்டார். பின் வீட்டில் இனியா நிச்சயதார்த்தத்திற்கு தயாராக இருந்தார். அப்போது அவர், அம்மா ரெஸ்டாரண்டை விட்டுக் கொடுத்து இந்த கல்யாணம் தேவையில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். உடனே அமிர்தா, எதுவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இதைப்பற்றி கவலைப்படாதே என்றார். பின் வீட்டுக்கு வந்த கோபி, சுதாகர் சொன்னதை சொன்னார். ஆனால், பாக்கியாவிற்கு நம்பிக்கையே இல்லை.
கடந்த வாரம் எபிசோட்:
பின் மண்டபத்தில் நிச்சயதார்த்தத்திற்கு முன்பு நடைபெறுவதற்கு முன்பு சுதாகரிடம் பாக்கியா குடும்பம் பேசி இருந்தார்கள். அப்போது பாக்கியா, ரெஸ்டாரண்டில் பெயர் மட்டும்தான் மாறும் என்றால் எனக்கு சம்மதம். ஆனால், எதுவாக இருந்தாலும் அக்ரிமெண்ட் போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னவுடன் சுதாகர் ஷாக் ஆனார். எப்படியாவது ரெஸ்டாரண்டை எடுக்க நினைத்தார். பாக்கியா குடும்பம் கொஞ்சம் ரொம்ப புத்திசாலித்தனமாக இருப்பதால் அதை வேற மாதிரி டீல் செய்ய வேண்டும் என்று தன்னுடைய மேனேஜரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சுதாகர்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுதாகர், எம்டியாக இருக்கும் டாக்குமென்டை கொடுத்து கையெழுத்து போட சொல்கிறார். பாக்கியா, எதுவுமே எழுதவில்லை. எப்படி கையெழுத்து போடுவது என்று கேட்கிறார். அதற்கு சுதாகர், நான் அப்புறமாக எழுதிக் கொள்கிறேன். திடீரென்று சொன்னதால் இதில்கையெழுத்து போடுங்கள். நான் இங்கு சொன்னதை தான் ஒரு வரி மாறாமல் எழுதிவிடுகிறேன். வேறு எதுவும் எழுத மாட்டேன் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கிறார். கோபி, ஈஸ்வரி எல்லோருமே பாக்கியாவை கையெழுத்து போட சொல்கிறார்கள். ஆனால், அரை மனதோடு தான் பாக்கியா விருப்பமே இல்லாமல் தன் மகளுக்காக கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் தன்னுடைய வருங்கால மருமகன் இடம் பாக்கியா ரொம்ப எமோஷனலாக இனியாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. மணக்கோலத்தில் இனியா தயாராகி மேடைக்கு வருகிறார். வீட்டில் உள்ள எல்லோரும் இனியாவை ரொம்ப எமோஷனல் ஆகிறார்கள். அப்போது பாக்கியாவை அழைத்த இனியா, உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால் சொல்லுங்கள். நான் இப்போதே கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன் என்று சொல்கிறார். ஆனால், பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என்று தடுத்து விடுகிறார். இனியாவிற்கு நல்லபடியாக திருமணம் நடக்கிறது. இனியா எல்லோரிடமும் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.