விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மனவேதனையில் இருந்த ஈஸ்வரியை தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு பாக்கியா அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ஈஸ்வரியை பார்த்து நக்கலாகவும்,ஏளனமாகவும் பேசி இருந்தார்கள். இதையெல்லாம் கேட்டு ஈஸ்வரி மனமடைந்து வீட்டுக்கு வந்து விட்டார். உடனே பாக்கியா, ஈஸ்வரியை மோசமாக பேசியவர்களை கடுமையாக திட்டி இருந்தார். அதற்குப்பின் ராதிகாவிடம் அவர் அம்மாவை பற்றி கோபமாக திட்டி இருந்தார். உடனே ராதிகா, ஈஸ்வரியை பார்த்து தன் அம்மா பேசியதற்கு மன்னிப்பு கேட்டார்.

பின் ஈஸ்வரி செய்த தவறை சுட்டி காட்டி குத்தி பேசி இருந்தார். இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி-பாக்கியா கோபப்பட்டார்கள். இன்னொரு பக்கம் கோபி ரெஸ்டாரண்டில் செழியன் பேசி கொண்டு இருந்தார்கள். அப்போது செழியன் தன் மன கஷ்டங்களை கோபியிடம் சொல்லி புலம்பி குடித்தார். ஆனால், கோபி அதை தடுக்காமல் அவரை என்கரேஜ் செய்தார். நிலை தடுமாறும் அளவிற்கு செழியன் குடித்து விடுவதால் வீட்டில் கொண்டு வந்து கோபி விட்டார்.
பாக்கியலட்சுமி:
இதை பார்த்து ஜெனி, ஈஸ்வரி, பாக்யா மூவருமே ஷாக் ஆகி கோபப்பட்டார்கள். அப்போது பாக்கியா, நீங்கள் தான் இதையெல்லாம் அவனுக்கு சொல்லித் தருகிறீர்களா? என்று கேட்க, வீட்டில் நிம்மதி இல்லை என்றால் அப்படித்தான் குடிப்பான். அவன் குடிப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று கோபி சொல்ல, உடனே பாக்கியா, எங்களுக்கும் தான் ஆயிரம் கவலை இருக்கிறது. அதற்காக குடிக்கிறோமா? என்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது.

கடந்த வாரம் எபிசோட்:
பின் ஈஸ்வரி, உன் பிள்ளையின் வாழ்க்கையை கெடுக்கிறாயா? என்று திட்டி இருந்தார். ஆனால், கோபி யார் சொல்வதையும் பற்றி கவலை இல்லாமல் அவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி வீட்டிற்கு வந்த உடனேயே ராதிகா அம்மா, எதற்காக பாக்யா வீட்டிற்கு போனீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு கோபி, உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள் என்று பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் எழில், தன்னுடைய வாழ்க்கையை நினைத்தும், இயக்குனர் கனவை நினைத்தும் ரொம்பவே வேதனை பட்டுக்கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து பாக்கியா அவருக்கு கால் செய்கிறார். பின் அவர் எழிலுக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் பாக்கியா-ஜெனி இருவருமே செழியினை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெனி, செழியன் நிலைமையை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசுகிறார். அந்த சமயம் வந்த செழியினை பார்த்து ஈஸ்வரி கோபப்பட்டு திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே பாக்கியா, நீ எதற்கு இப்படி எல்லாம் செய்கிறாய்? உனக்கு என்ன ப்ரச்சனை? போராடி கிடைத்த உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே என்று அறிவுரை சொல்லி புரிய வைக்கிறார். பின் வீட்டில் எல்லோருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அப்போது இனியா, தன்னுடைய நடன போட்டியை பற்றி பேச, எல்லோருமே கிண்டல் கேலி செய்து கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.






