விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா போன் செய்துமே அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் ஆகாஷ் உடன் தொடர்ந்து இனியா போன் பேசிக்கொண்டு இருந்தார். பின் இதை பற்றி பாக்கியா கேள்வி கேட்டவுடன் இனியா ஏதேதோ சொல்லி சமாளித்தார். அதற்குப்பின் பாக்கியா ரெஸ்டாரன்ட் கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார். உடனே கோபி, காபி போட்டு கொடுத்தார். ஆனால், பாக்கியா அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலை செய்து கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:

ஈஸ்வரி, என் மகனை திருமணம் செய்வதில் உனக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி திமிர் பிடித்து ஆடுகிறாய் என்றெல்லாம் கேட்டார். அதற்கு பாக்கியா, உங்கள் மகனுக்கு வேண்டும் என்றால் மூன்றாவது திருமணம் செய்யுங்கள். என்னால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று பேசி இருந்தார். உடனே ஈஸ்வரி கோபத்தில் பாக்கியாவை திட்டிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் கோபி, எழிலை வரவைத்து பேசி இருந்தார். அப்போது கோபி, வீட்டிற்கு வந்துவிடு. உன்னுடைய அம்மா நீங்கள் யாரும் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார்.
பாக்கியலட்சுமி:
நீங்கள் அவளுடன் இருந்தால் சந்தோஷமாக இருப்பாள் என்று சொன்னார். ஆனால், எழிலுக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் கோபியின் கட்டாயத்தினால் சரி என்றார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் இனியா தன்னுடைய அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருக்க, அந்த சமயம் பார்த்து ஆகாஷ் வந்தார். இனியா- ஆகாஷ் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த செல்விக்கு பயங்கர கோபம் வந்தது. பின் ஆகாஷை அழைத்து, செல்வி கண்டித்தார். நேற்று எபிசோட்டில் எழில்- செழியன் இருவரும் வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்று கோபி சொன்னவுடன் ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், பாக்கியா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

நேற்று எபிசோட்:
பின் இதைப்பற்றி பாக்கியா, செல்வி இடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், என் மகன்களை நான் என்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டேன். கோபிக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று புலம்பி இருந்தார். மறுநாள் காலையில் பாக்கியா, எல்லோரும் வீட்டிற்கு வருவதால் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார். முதலில் செழியன்- ஜெனி இருவரும் வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் கோபி- ஈஸ்வரி சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் எழில்- அமிர்தா வந்தார்கள். மொத்த குடும்பமே கலகலப்பாக இருந்தது. ஆனால், பாக்கியா எதுவும் பேசாமல் தன்னுடைய வேலையில் பிஸியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, உனக்கு இப்போது சந்தோஷமா, நான் கிளம்புவதற்குள் எல்லோரையும் ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று சொல்கிறார். இது எல்லாம் கேட்டவுடன் பாக்கியவருக்கு பயங்கர கோபம் வருகிறது. அவர், என் மகன்கள் என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று உங்களிடம் சொன்னேனா? உங்கள் அம்மா என்னென்ன பிரச்சனை எல்லாம் செய்யப் போகிறார்கள் பாருங்கள் என்று ரொம்ப ஆவேசமாக பேசுகிறார். கோபிக்கு ஒன்றுமே புரியவில்லை.

சீரியல் ட்ராக்:
அதற்கு பின் ஈஸ்வரி, பாக்கியா ரொம்ப திமிர் பிடித்தவளாக இருக்கிறார். சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அவளுடைய குணமே மாறிவிட்டது. பிள்ளைகள் வீட்டிற்கு வந்ததை நினைத்து வேதனைப்படுகிறார் என்று வழக்கம் போல் திட்டி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு பின் எல்லோருமே சந்தோசமாக சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எழில்-அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? நிலாவிற்கு துணை வேண்டாமா? என்று ஆரம்பிக்கிறார். இதை பார்த்தவுடன் பாகியாவிற்கு கோபம் வந்து கோபியை முறைக்கிறார். கோபிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எழில்-அமிர்தா இருவருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






