கோபியின் சுயரூபத்தை அறிந்து வெளுத்து வாங்கிய பாக்கியா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
161
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, எல்லோரையும் தன் பக்கம் இழுத்து பாக்யாவை தனிமரம் ஆக்கி அழிக்காமல் விடமாட்டேன் என்று வன்மத்தோடு பேச, ராதிகா அறிவுரை சொல்லியும் ஏற்றுக்கொள்ளவில்லை. எழில், தன்னுடைய படத்திற்கு பூஜை போடுவதைப் பற்றி வீட்டில் சொல்ல, எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் கோபி, பூஜைக்கு பாக்கியா வரக்கூடாது என்று சொல்ல, தயாரிப்பாளர் ஒத்து கொண்டார். மேலும், பாக்கியா, ஸ்பெஷல் ஆஃபர் அறிமுகம் செய்தார்.

-விளம்பரம்-

இதை எப்படியாவது சுதப்பி பாக்கியாவை மாட்டி விட வேண்டும் என்று கோபி- புதுசெப் மீண்டும் திட்டம் போட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் படத்தின் பூஜைக்காக எல்லோருமே மும்முரமாக ரெடியாகி கிளம்பி இருந்தார்கள். பாக்கியா தவிர எல்லோரும் பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள். எழில் தன் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது தயாரிப்பாளர், படத்திற்கு தேவையான எல்லா டாக்குமென்டில் கையெழுத்து வாங்கி, இந்த பூஜைக்கு உங்களுடைய அம்மா வரக்கூடாது என்று சொல்ல, எழில் ரொம்பவே பதறினார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அவர் வந்தால் பூஜை நடக்காது என்றார். அந்த சமயம் வந்த கோபி, உன்னுடைய அம்மா இங்கே வரக்கூடாது என்று மிரட்ட, எழிலுக்கு பயங்கர கோபம் வந்தது. என்னுடைய அம்மா வருவார் என்று எழில் சொல்லியுமே, தயாரிப்பாளர்-கோபி இருவருமே ஏற்றுக் கொள்ளவே இல்லை. பின் தனியாக சென்று எழில், தன்னுடைய அம்மாவை பற்றியும், அவர் சொன்ன வார்த்தைகளை பற்றியும் நினைத்து புலம்பி அழுதார்.
அப்போது பூஜைக்கு பாக்கியா வந்தார். எழில், நீ உள்ளே வர வேண்டாம்.

நேற்று எபிசோட்:

கிளம்பி போ என்று சொல்ல, பாக்கியாவுக்கு ஒண்ணுமே புரியவில்லை. நேற்று எபிசோட்டில், நீ உள்ளே வந்தால் பூஜை நடக்காது. படம் எடுக்க முடியாது என்று எழில் சொல்ல, சும்மா விளையாடாதே வா போலாம் என்று பாக்கியா சொன்னார். உடனே எழில், பாக்கியா கையைப் பிடித்து தயவு செய்து நான் வாழ்க்கையில் முன்னேறனும் என்று நினைத்தால் இந்த இடத்தை விட்டு போங்கள் என்று சொல்லி அழ, பாக்கியாவும் மனம் உடைந்து அழுது கொண்டு வெளியே போனார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

பின் எழில், தன் படத்திற்கான டைட்டிலில் பாக்கியலட்சுமி என்று வைத்து இருந்தார். அதை பார்த்த உடனே எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், கோபி ஷாக் ஆகினார். பின் தன்னுடைய அம்மாவை பற்றி ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் எழில் பேசி இருந்தார். இதையெல்லாம் வெளியில் நின்று கேட்ட பாக்யா ஆனந்தத்தில் அழுதார். கோபிக்கு முகமே இல்லை, பயங்கரமாக எழில் மீது கோபப்பட்டார். சந்தோஷத்தில் பாக்கியா அங்கிருந்து சென்றார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் பாக்கியா தன்னுடைய புதிய ஆர்டர் எல்லாம் சிறப்பாக செய்து முடிக்கிறார். அப்போது அந்த செப்பிற்கு கோபி ஃபோன் செய்து பேசுகிறார். இதை அறிந்த பாக்கியா, அந்த செப்பை விசாரித்தார். உண்மை தெரிந்த பாக்கியா, ராதிகா வீட்டிற்கு சென்று கோபியை கடுமையாக எச்சரித்து திட்டி விட்டு செல்கிறார். இதையெல்லாம் கேட்டு ராதிகா அதிர்ச்சியாகி நிற்கிறார்.

Advertisement