விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கிறேன். தயவுசெய்து இந்த வீட்டை உங்களுடைய வீட்டிற்கு போங்கள் என்று சொன்னவுடன் கோபியின் முகமே மாறி விட்டது. பின் பாக்கியா-மையூ பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அங்கு வந்த ராதிகா, பாக்கியாவை பற்றி மோசமாக பேசி இருந்தார். வேதனையில் வீட்டுக்குள்ளே வந்த பாக்கியா, எல்லோரும் கலகலப்பாக பேசுவதை பார்த்துவிட்டு இன்னும் கோபப்பட்டார். பின் கோபியிடம் பாக்கியா, உங்களால் எல்லோருடைய வாழ்க்கையும் நாசமாகிறது. வீட்டை விட்டு கிளம்புங்கள் என்றார். கோபிக்காக ஈஸ்வரி சப்போர்ட் செய்து பேசி இருந்தார்.

இதனால் வாக்குவாதம் அதிகமானது. பின் கோபிக்கு நெஞ்சுவலி வந்தது. கோபியை மருத்துவர் செக் பண்ணி பார்த்து கவனமாக இருங்கள் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, நடந்ததை சொன்னார். பின் தயவுசெய்து என் மகன் உயிரை காப்பாற்று. அவனை வீட்டை விட்டு மட்டும் வெளியே அனுப்பாதே. என் மகன் மீது போட்ட கேஸை வாபஸ் வாங்கி விடு. நான் உன்னிடம் மடிப்பிச்சை கேட்கிறேன் என்று கதறி அழுதார். பாக்கியாவால் எதுவுமே பேச முடியவில்லை. நேற்று எபிசோட்டில் பாக்கியா வீட்டிற்கு வந்த எழில் எல்லோரிடமும் பேசி இருந்தார். ஆனால், கோபியை கண்டு கொள்ளவே இல்லை.
பாக்கியலட்சுமி:
அப்போது ஈஸ்வரி, நீ வீட்டிற்கு மீண்டும் வரவேண்டும். அதற்காகத்தான் உன்னை இங்கு வர சொன்னேன். எல்லோரும் ஒரு குடும்பமாக இருக்கலாம் என்றார். அதற்கு பாக்கியா ஒத்து கொள்ளவில்லை. எழிலும் தன் அம்மா சொன்னதை கேட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். இதனால் ஈஸ்வரி, பாக்கியா மீது கோபப்பட்டார். பின் கோபி, இது நம்முடைய குடும்பம். எதுவாக இருந்தாலும் ஒரே இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்ல, பாக்யாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி கோபியை திட்டி இருந்தார். அதற்குப்பின் ராதிகா, கோபியை பார்க்க வீட்டிற்கு வந்தார்.

இன்றைய எபிசோட் :
கோபியிடம் நலம் விசாரித்துவிட்டு மயூவின் பிறந்தநாளை பற்றி ராதிகா சொன்னார். இன்றைய எபிசோட்டில் ராதிகா, வீட்டிற்கு கோபியை வர சொல்கிறார். கோபி, இனியா காம்பிடெசன் நடக்கிறது என்று சொல்கிறார். உடனே ராதிகா, உடம்பு சரியில்லாத நேரத்தில் அலச்சல் வேண்டாம். வீட்டில் ஓய்வெடுங்கள் என்று சொல்ல, எனக்கு என் மகள் சந்தோஷம்தான் முக்கியம் என்று கோபி சொல்கிறார். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரி வந்தவுடன் ராதிகா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அப்போது இனியா, நீங்கள் என்னிடம் இருந்து அப்பாவை பிரிக்க பார்க்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
எங்க அப்பா இப்பதான் நிம்மதியாக இருக்கிறார். நான்தான் அவருடைய சொந்த பொண்ணு. தயவுசெய்து என் அப்பாவுக்கு விவாகரத்து கொடுங்கள் என்று ரொம்ப மோசமாக ராதிகாவிடம் பேசுகிறார். இதனால் ராதிகா ரொம்பவே மனமடைந்து வீட்டிற்கு செல்கிறார். பின் நடந்ததை எல்லாம் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டை காலி செய்து விடுவதாக ஹவுஸ் ஓனரிடம் ராதிகா சொல்கிறார். பின் அந்த ஓனர் நடந்தை கோபியிடம் சொல்ல, அவர் ராதிகாவுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார். அப்போது ராதிகா, நீங்கள் வர மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எல்லோரும் உங்களை வரவிட மாட்டார்கள். உங்களுக்கு தெரியாமல் என்னென்ன சொன்னார்கள் தெரியுமா? என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.
https://www.youtube.com/watch?v=4rU5JuejykY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் கோபி, எதற்கு வீட்டை காலி செய்கிறாய்? என்று கேட்கிறார். அதற்கு ராதிகா, நீங்கள் எனக்கு உரிமை இல்லை என்று சொல்லும் போது நாங்கள் இங்கே எப்படி இருக்க முடியும் என்கிறார். கோபி, நான் என்னுடைய குடும்பத்துடன் கொஞ்ச நாள் சந்தோஷமாக இருக்க கூடாதா? என்று கோபி கத்துகிறார். இதனால் அவருக்கு நெஞ்சு வலி வருகிறது. எல்லோருமே பதறிப் போகிறார்கள். அப்போது இனியா, உங்களால் தான் என் அப்பாவுக்கு நெஞ்சு வலிந்து வந்தது. தயவு செய்து இங்கிருந்து போங்கள். எங்க அப்பாவை கொன்று விடாதீர்கள் என்று பேச, பாக்யாவுக்கு கோவம் வந்து இனியாவை அடித்து விடுகிறார்.






