விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி நினைவில் இருந்து மொத்த குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது. கல்லூரிக்கு இனியாவை ஈஸ்வரி அழைத்துப் போனார். அதை பார்த்த கோபி தன்னோட அம்மாவிடம் எவ்வளவோ பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், ஈஸ்வரி மனம் மாறாமல் அப்படியே இருந்தார். இதனால் கோபப்பட்டு கோபி, நான் மனமுடைந்து சொல்கிறேன், உங்களை ரொம்ப வெறுக்கிறேன் என்று சொன்னவுடன், நான் வெறுப்பதற்கு கூட உன்னை ஒரு ஆளாக நினைக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி கிளம்பி இருந்தார்.

வீட்டிற்கு வந்த கோபி, தன் அம்மா சொன்னதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான். அவளை அடையாளம் தெரியாமல் அழிக்க போகிறேன் என்று சொல்ல, உடனே ராதிகா, அறிவுரை சொல்ல கோபி ஏற்றுக்கொள்ளவில்லை. பின் இனியா, கல்லூரியில் நடன போட்டி நடைபெறுகிறது. அதில் இனியா கலந்து கொண்டார். நடன போட்டி குறித்து இனியா தன்னுடைய அண்ணன் எழில் இடம் சொல்ல, அவர் பாராட்டி வாழ்த்தி இருந்தார். பின் பாக்கியா, சமையலுக்கு ஒரு ஆளை வேலைக்கு எடுக்கிறேன் என்றவுடன் ஈஸ்வரியும் ஒத்துக் கொண்டார். பின் பாக்கியா கொடுத்த விளம்பரத்தை பார்த்து கோபி தன்னிடம் வேலை செய்யும் நபரை, பாக்யாவிடம் வேலை செய்ய அனுப்பி இருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
இதை அவர் நண்பர் எதற்கு என்று கேட்க, பாக்கியவை பழிவாங்க இதை செய்கிறேன் சென்று ஆக்ரோஷமாக கோபி பேசி இருந்தார். நேற்று எபிசோடில் புது நபர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டிற்கு வந்து வேலை கேட்க, பாக்யாவும் அவரைப்பற்றி விசாரித்து வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். இதை அந்த நபர் போன் பண்ணி சொல்ல, கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் வீட்டில் கோபி, ராதிகா உடன் ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் இனியா கல்லூரியில் நடனம் போட்டி நடந்தது. அதில் இனியா நடனமாடி முடித்தார். ஆனால், ரிசல்ட்டை அப்புறமாக செல்வதாக கிளம்பி விட்டார்கள். இதனால் இனியா பயத்தில் இருக்கிறார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில், இனியா தன்னுடைய நடன போட்டிக்காக நன்றாக வீட்டில் பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், நடன போட்டியில் சேர்ந்து இருக்கும் விஷயத்தை இனியா வீட்டில் யாரிடமும் சொல்லவே இல்லை. பாட்டு சத்தத்தை கேட்டு ஈஸ்வரி, ஜெனி இருவருமே என்ன? என்று கேட்க, ஏதோ சொல்லி இனியா சமாளிக்கிறார். பின் பாக்யாவும், இனியா நடனம் ஆடுவதைப் பற்றி விசாரிக்க அவர் சமாளித்து விடுகிறார். இன்னொரு பக்கம் கோபி, இனி குடிக்க மாட்டேன் என்று தன் நண்பனிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் செழியன், அதே பாரில் தனியாக குடித்துக் கொண்டிருப்பதை கோபி பார்த்துவிட்டு விசாரிக்க, ஆபீஸில் பிரச்சனை. சீனியர் நபர்களை எல்லாம் வேலை விட்டு தூக்கி விட்டார்கள். எனக்கும் வேலை போய் விடுமோ? என்று பயமாக இருக்கிறது என்று செழியன் சொல்ல, கோபி ஆறுதல் சொல்லி அவரை வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இனியா, நான் டான்ஸ் காம்பிடிஷனில் செலக்ட் ஆகி விட்டேன். டிவியில் வரும் ரியலாட்டி நிகழ்ச்சி போல் இரண்டு மாதம் நடக்க இருக்கிறது. ஆனால், அம்மா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என்று சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=OcWvF-DatiQ
சீரியல் ப்ரோமோ:
உடனே கோபி, நீ கலந்து கொள். உனக்கு நான் சப்போர்ட்டாக இருக்கிறேன் என்று இனியாவை உஸ்பேத்தி விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த இனியாவை பார்த்து ஈஸ்வரி, உன் அப்பாவிடம் பேசாமல் இருக்க முடியாதா? என்று கேட்டதற்கு, ஆமாம் முடியாது. உங்களுக்கு வேணும் என்றால் பேசணும், இல்லையென்றால் நான் பேசக்கூடாதா? என்று தன்னுடைய பாட்டியை எதிர்த்து பேசுகிறார். கோபத்தில் பாக்யா கத்துகிறார். பாக்கியாவை பழிவாங்க இனியாவை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறீர்களா? என்று ராதிகா கேட்க, கோபி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார்.






