விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா தன்னுடைய புது ஹோட்டலை திற்பதற்கான வேலைகள் செய்து கொண்டிருந்தார். அங்கு பாக்கியாவின் குடும்பத்திலிருந்து ஒவ்வொருவராக வந்தார்கள். ஆனால், ஈஸ்வரி மட்டும் வரவில்லை. இதனால் பாக்கியா கொஞ்சம் வருத்தப்பட்டார். அதற்குப்பின் பூஜை துவங்கும் போது ஈஸ்வரி வந்து விட்டார். இதனால் பாக்கியாவுக்கு ஒரே சந்தோஷம். இருந்தாலும் ஈஸ்வரி ரொம்ப நக்கல், கிண்டலாக ஓட்டலையும் பாக்யாவையும் பேசி இருந்தார். அதற்குப்பின் பூஜையெல்லாம் முடிந்து எல்லோருமே ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஈஸ்வரி, இந்த இடத்தில் என்னால் இருக்க முடியவில்லை என்று கோபியை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். பின் பாக்கியா புது ஹோட்டலை பற்றி கோபி இடம் விமர்சனம் செய்து கொண்டிருந்தார். ஆனால், கோபி அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய அம்மாவின் புது ஹோட்டல் திறப்பு விழாவிற்கு கிளம்ப தயாராகி இருந்தார். அதற்கு சுதாகர், விஐபி வீட்டிற்கு போக வேண்டும். நாளைக்கு அவர்கள் யுஎஸ்ஏ செல்கிறார்கள் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி இனியாவை போகவிடாமல் தடுத்து விட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் இனியா, தன்னுடைய அம்மாவின் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு செல்லாததை பற்றி வருத்தத்துடன் பேசி இருந்தார். உடனே நிதிஸ், அப்பா சொல்வதை தான் கேட்க வேண்டும். அதுதான் எங்கள் வீட்டில் வேதவாக்கு என்பது போல பேசுவதால் இனியா அமைதியாகி விட்டார். பின் தன் அண்ணன் எழில் உடன் தன்னுடைய அம்மாவை பார்க்க வருகிறார் இனியா. அங்கு ஹோட்டல் சின்னதாக இருப்பதை பார்த்து இனியாபயங்கரமாக ஷாக் ஆனார். ஏன்? என்னானது? என்று கேட்டார். உண்மையை சொல்லாமல் பாக்கியா ஏதேதோ சொல்லி சமாளித்தார்.

நேற்று எபிசோட்:
பின் இனியா, தன் அண்ணனிடம் சத்தியம் வாங்கி உண்மையை கேட்டார். வேறு வழியில்லாமல் எழில், இரண்டு ரெஸ்டாரண்டையும் இழந்த விஷயத்தை சொன்னார். இதைக் கேட்டவுடன் இனியா ஷாக் ஆகி தன்னுடைய அம்மாவை பார்க்க மீண்டும் வந்தார். அப்போது இனியா, எனக்காகத்தான் ரெஸ்டாரன்ட்டை இழந்தீர்களா? அவர்கள் உங்களை மிரட்டி வாங்கினார்களா? என்றெல்லாம் கேட்டார். ஆனால், பாக்கியா உண்மையை சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் வீட்டிற்கு சென்ற இனியா, சுதாகரிடம் ரெஸ்டாரண்டை பற்றி விசாரித்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுதாகர், நான் எதுவும் உங்க அம்மாவிடம் கேட்டு வாங்கவில்லை. அவர்களாக தான் கிப்டாக கொடுத்தார். அவர்கள் தேவையில்லாமல் உன்னிடம் சொல்லியிருப்பார் என்று சொல்கிறார். உடனே இனியா, அம்மா எதுவுமே சொல்லவில்லை. கிப்டாக தான் கொடுத்தேன் என்று சொன்னார் என்று சுதாகருக்கு பதிலுக்கு பதில் பேசுகிறார். இதனால் கோபப்பட்ட நிதிஸ், அப்பாவிடம் மன்னிப்பு கேள். நீ அப்பாவை எதிர்த்து பேசுவாயா? என்று இனியாவை திட்டுகிறார். அதற்கு இனியா, எதுவும் பேசாமல் சுதாகரிடம் மன்னிப்பு கேட்டு அமைதியாகிறார். கடைசி வரை இனியாவிற்கு ரெஸ்டாரன்ட் விஷயத்தில் நடந்த உண்மை தெரியவில்லை.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் வியாபாரத்தை எல்லாம் முடித்துவிட்டு கடையை பாக்கியா மூட போகிறார். அங்கு வந்த கவுன்சிலர், நான்வெஜ் செய்ய சொல்லி குடித்துவிட்டு தகராறு செய்கிறார். பாக்கியா- செல்வி இருவருமே எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அவர்கள் கேட்டதை செய்து கொடுக்கிறார்கள். கடையிலேயே உட்கார்ந்து குடிக்கிறார்கள். அப்போது வந்து செல்வியின் மகன் ஆகாஷ், அவரிடம் கேள்வி கேட்கும் போது அவரையுமே எதிர்த்து பேசி சண்டை போடுகிறார்கள். என்ன சொல்வது என்றே புரியாமல் பாக்கியா அமைதியாக இருக்கிறார். சாப்பிட்டதற்கு காசு கொடுக்காமல் அங்கிருந்து சென்று விடுகிறார்கள். பின் வேலை முடித்து வீட்டிற்கு பாக்கியா வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






