மாமியாரை கட்டாயப்படுத்திய பாக்கியா, சந்தோஷத்தில் கோபி செய்தது – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
220
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி ‘ சீரியலில் கடந்த வாரம், செழியன் தன் மன கஷ்டங்களை கோபியிடம் சொல்லி புலம்பி குடித்தார். ஆனால், கோபி அதை தடுக்காமல் அவரை என்கரேஜ் செய்தார். நிலை தடுமாறும் அளவிற்கு செழியன் குடித்து விடுவதால் வீட்டில் கொண்டுவந்து கோபி விட்டார். இதைப் பார்த்து ஜெனி, ஈஸ்வரி, பாக்கியா மூவருமே ஷாக் ஆகி இருந்தார்கள். உடனே பாக்கியா, கோபி உடன் சண்டை போட இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானது. பின் கோபி வீட்டிற்கு வந்த உடனே ராதிகா அம்மா, எதற்காக பாக்கியா வீட்டிற்கு போனீர்கள்? என்று கேட்டார்.

-விளம்பரம்-

அதற்கு கோபி, உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள் என்று பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம், எழில் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தார். பின், செழியனை நினைத்து ஜெனி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த செழியன் இடம் பாக்கியா, நீ எதற்கு இப்படி எல்லாம் செய்கிறாய்? என்று அறிவுரை சொல்லி புரிய வைத்தார். பின் வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட இனியா, தன்னுடைய நடனப் போட்டியை பற்றி பேசி இருந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

எல்லாரும் கிண்டல் கேலி செய்து கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். நேற்று எபிசோடில், இனியாவின் நடனப் போட்டியை பார்ப்பதற்கு பாக்யா தன் மாமியாரை கிளம்ப சொன்னார். ஆனால், ஈஸ்வரி போட்டியை பார்க்க செல்ல மறுத்தார். ஆனால், பாக்கியா தன் மாமியாரை புது புடவை கட்ட சொல்லி வற்புறுத்த, ஈஸ்வரியும் மறுக்க முடியாமல் போட்டிக்கு செல்ல தயாராகி இருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த அமிர்தாவின் அம்மா , ஈஸ்வரியிடம் மற்றவர்களைப் போலவே கணவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் எங்கும் வெளியே போகக்கூடாது என்று அட்வைஸ் செய்தார்.

நேற்று எபிசோட்:

பின் பாக்கியா, அமிர்தாவின் அம்மாவை திட்டி அனுப்பி விட்டார். இதையெல்லாம் கேட்டு வருத்தமடைந்த ஈஸ்வரி, போட்டிக்கு செல்ல மறுத்தார். பின் இனியா நடனப் போட்டியில் கலந்து கொண்டு நன்றாக ஆடி இருந்தார். அப்போது இனியா ஆடும் போது கோபி கீழே இருந்தே என்கரேஜ் செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த எழில், கோபியை தனது அம்மாவிடம் திட்டுகிறார். கடைசியில், சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து போட்டியாளர்களில், இனியாவும் செலக்ட் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இதைக் கேட்டவுடன் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், இனியாவை எல்லோரும் பாராட்டி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கோபி வைத்த நபர், பாக்யாவின் ஆர்டரை கெடுக்க திட்டம் போடுகிறார். ஆனால், பாக்கியா நானே ஆர்டரை பார்த்துக் கொள்கிறேன் என்று என்று அவரை அனுப்பி விடுகிறார். இந்த முறையும் அவருடைய திட்டம் பழிக்கவில்லை.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் தான் எடுத்த ஆர்டருக்கு பாக்கியா பொருள்களை வாங்க செல்வியை அனுப்பி வைக்கிறார். பின் வீட்டில் பாக்கியா, தான் சமைக்கும் இடத்திற்கு ஈஸ்வரியை அழைக்கிறார். ஆனால், அவர் வர மறுத்தார். இருந்தும் பாக்கியா விடாமல் ஈஸ்வரியை கட்டாயப்படுத்துகிறார். கடைசியில் பாக்கியா வர ஒத்து கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Advertisement