விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். கோபிக்காக ஈஸ்வரி சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானது. பின் கோபிக்கு நெஞ்சுவலி வந்ததால் மருத்துவரை வர வைத்து செக் பண்ணார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, நடந்ததை சொன்னார். பின் தயவுசெய்து என் மகன் உயிரை காப்பாற்று. அவனை வீட்டை விட்டு மட்டும் வெளியே அனுப்பாதே. என் மகன் மீது போட்ட கேஸை வாபஸ் வாங்கி விடு.

நான் உன்னிடம் மடிப்பிச்சை கேட்கிறேன் என்று கதறி அழுதார். பாக்கியாவால் எதுவுமே பேச முடியவில்லை. பாக்கியா வீட்டிற்கு வந்த எழில் எல்லோரிடமும் பேசி இருந்தார். ஆனால், கோபியை கண்டு கொள்ளவே இல்லை. அப்போது ஈஸ்வரி, நீ வீட்டிற்கு மீண்டும் வரவேண்டும். அதற்காகத்தான் உன்னை இங்கு வர சொன்னேன் என்றார். அதற்கு பாக்கியா ஒத்து கொள்ளவில்லை. எழிலும் தன் அம்மா சொன்னதை கேட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கோபி, இது நம்முடைய குடும்பம். எதுவாக இருந்தாலும் ஒரே இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்ல, பாக்யாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி கோபியை திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
அதற்குப்பின் ராதிகா, கோபியை பார்க்க வீட்டிற்கு வந்தார். கோபியிடம் நலம் விசாரித்துவிட்டு மயூவின் பிறந்தநாளை பற்றி ராதிகா சொன்னார். நேற்று எபிசோடில் கோபி, இனியா காம்பிடெசன் நடக்கிறது என்று சொன்னார். உடனே ராதிகா, உடம்பு சரியில்லாத நேரத்தில் அலச்சல் வேண்டாம். வீட்டில் ஓய்வெடுங்கள் என்று சொல்ல, எனக்கு என் மகள் சந்தோஷம்தான் முக்கியம் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரி வந்தவுடன் ராதிகா அங்கிருந்து கிளம்பி விட்டார். அப்போது இனியா, நீங்கள் என்னிடம் இருந்து அப்பாவை பிரிக்க பார்க்கிறார்கள்.

நேற்று எபிசோட்:
எங்க அப்பா இப்பதான் நிம்மதியாக இருக்கிறார். நான்தான் அவருடைய சொந்த பொண்ணு. தயவுசெய்து என் அப்பாவுக்கு விவாகரத்து கொடுங்கள் என்று ரொம்ப மோசமாக ராதிகாவிடம் பேசி இருந்தார். இதனால் ராதிகா ரொம்பவே மனமடைந்து அங்கிருந்து வீட்டை காலி செய்ய முடிவு எடுத்தார். இதை அறிந்த கோபி ராதிகாவை வீட்டிற்கு வரவைத்தார். அப்போது ராதிகா, நீங்கள் வர மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எல்லோரும் உங்களை வரவிட மாட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
அதனால் தான் நாங்கள் கிளம்பி போகிறோம் என்றார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, அதெல்லாம் வேண்டாம். நான் ஓய்வெடுத்துவிட்டு தானே வருகிறேன் என்று சொல்கிறேன். ஏன் புரிந்து கொள்ள மாட்டுகிறாய்? என்று ராதிகாவிடம் வாக்குவாதம் செய்கிறார். அப்போது கோபிக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்துவிடுகிறது. இதனால் எல்லோருமே பதறி போகிறார்கள். இனியா ரொம்பவே அழுது கொண்டிருக்கிறார். எதுவும் பேச முடியாமல் ராதிகா அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இனியா, உங்களால் தான் எங்க அப்பாவிற்கு இந்த நிலைமை. தயவு செய்து எங்க அப்பா வாழ்க்கையை விட்டு சென்று விடுங்கள். என் அப்பாவை பார்க்க வராதீர்கள் என்று பேச ராதிகா ரொம்பவே மனமடைந்து விடுகிறார். இதையெல்லாம் கேட்ட பாக்கியா, இனியவை அடித்து விடுகிறார். பின் கோபி வீட்டிற்கு வருகிறார். அவர் ராதிகாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக ஓய்வெடுக்க போகிறார். யாருமே ராதிகாவை உள்ளே விடவில்லை. ஈஸ்வரி, ராதிகாவை ரொம்ப மோசமாக திட்டி அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய நண்பரிடம் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






