விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா சொன்ன வார்த்தையால் கோபி மனம் உடைந்து விட்டார். அதற்குப்பின் வீட்டில் கோபி- ராதிகா இடையே சண்டை நடந்தது. இதனால் கோபி வீட்டை விட்டு வெளியே போனார். பின் காரில் வந்து கொண்டிருக்கும் போது கோபிக்கு நெஞ்சுவலி வந்தது. அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு ராதிகாவிற்கு போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் வேறு வழியில்லாமல் பாக்கியாவுக்கு போன் செய்து கோபி நடந்ததை சொல்ல, பாக்யாவும் ஹாஸ்பிடலில் கோபியை சேர்த்தார்.
மேலும், ராதிகாவிற்கு தகவலை சொல்ல பாக்கியா போன் செய்தார். ஆனால், அவருடைய போன் ரீச் ஆகவில்லை. கோபியின் உடல்நிலை சீரியசாக இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார் மருத்துவர். பின் உண்மை அறிந்த ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். இந்த விஷயத்தை எப்படியாவது ராதிகாவிடம் சொல்ல வேண்டும் என்றார் பாக்கியா. ஆனால், ஈஸ்வரி கோபப்பட்டு திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
ஹாஸ்பிடலில் கோபிக்கு மும்முரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். என்ன நடக்குமோ? என்ற பயத்தில் ஈஸ்வரி புலம்பி அழுது இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ராதிகா, கோபி வராததை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். பின் ராதிகா, கோபிக்கு போன் செய்தார். அதை பார்த்தவுடன் ஈஸ்வரி ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இன்னொரு பக்கம் கோபிக்கு சிகிச்சை நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்தது.
நேற்று எபிசோட்:
இந்த தகவலை அறிந்து அமிர்தா, ஜெனி எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு போனார்கள். ஒரு கட்டத்தில் பாக்யா வீட்டிற்கு சென்றார் ராதிகா. ஆனால், அங்கு யாருமே இல்லை. நேற்று எபிசோட்டில், ஹாஸ்பிடலில் எல்லோருமே கோபியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா, வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு வாருங்கள் என்று ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு வந்தார். இன்னொரு பக்கம் ராதிகா கோபியை தேடி அலைந்து கொண்டிருந்தார். ஆனால், அவர் எங்குமே கிடைக்கவில்லை.
சீரியல் ட்ராக்:
மேலும், கோபியை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு ஈஸ்வரி பேசிக் கொண்டிருந்தார். இது எல்லாம் பார்த்து செல்விக்கு பயங்கர கடுப்பாகி இருந்தது. அதற்கு பின் ஹாஸ்பிடலுக்கு வந்த பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் செய்து வரவைத்து நடந்ததை சொன்னார். அதைக் கேட்டவுடன் ராதிகா அதிர்ச்சி ஆனார். பின் கோபியை பார்க்க உள்ளே போக, ஈஸ்வரி பயங்கரமாக ராதிகாவிடம் சண்டை போட்டார். உடனே எழில், பாக்கியா இருவருமே தடுத்து விட்டார்கள். கோபியை நினைத்து ராதிகா ரொம்ப கவலைப்பட்டார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ராதிகா-பாக்கியா இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராதிகா, உங்கள் வீட்டில் இருக்கும் வரை அவர் சந்தோஷமாக இருந்ததாகவும் என்னை திருமணம் செய்ததற்கு பிறகு தான் அவருக்கு நிம்மதி இல்லை என்றும் எல்லோரும் சொல்கிறார்கள். நான் கோபியை கல்யாணமே செய்திருக்க கூடாது. நான் நிம்மதியாகவே இல்லை என்று ரொம்ப மனமடைந்து பேசுகிறார். உடனே பாக்கியா, நீங்கள் இருவரும் மனது விட்டு பேசுங்கள். எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்கிறார்.