விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஜெனியுமே பாக்கியாவை தான் குறை சொன்னார். பின் கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார். அதற்குப் பின் வீட்டிற்கு வந்த ஜெனியின் அப்பா, உண்மை தெரியாமல் பாக்கியாவை தான் திட்டிக் கொண்டிருந்தார். ஆனால், பாக்கியா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த கோபி, கவுன்சிலர் நிறைய அரசியல்வாதிகளை கைக்குள் வைத்து இருந்தார். செழியனை வெளியே எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்று சொன்னார். அதற்குப்பின் சுதாகரும், இனியாவும் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது சுதாகர், என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று நக்கல் ஆக பாக்கியாவை பார்த்து சொன்னார்.

அதற்குப்பின் செழியன் கைது செய்த விவகாரம் தொடர்பாக சுதாகர் விசாரித்தார். சுதாகர், தனக்கு தெரிந்தவர்களின் மூலம் விசாரித்து செழியனை வெளியே எடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நான் முடிந்த வரை முயற்சிக்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டார். இதனால் ஈஸ்வரி பாக்கியாவிடம் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். பின் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கவுன்சிலர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தார். அப்போது போலீஸ், நீங்க முன்னாடியே புகார் கொடுக்க வேண்டியது தானே, இப்போது எதுக்கு கொடுக்கிறீர்கள்? என்று அந்த கம்ப்ளைண்ட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
பாக்கியலட்சுமி:
பின் வீட்டில் இதைப் பற்றி பாக்கியா சொன்னவுடன் ஈஸ்வரி, ஜெனியின் அப்பா எல்லோரும் திட்டினார்கள். உடனே கோபத்தில் ஜெனியின் அப்பா, ஜெனியையும் அவருடைய குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். பாக்கியா எப்படியாவது செழியனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார். தனக்கு தெரிந்தவர்கள் மூலமெல்லாம் உதவி கேட்டார். கடைசியில் பாக்கியா கவுன்சிலர் வீட்டுக்கு சென்றார். அங்கு கவுன்சிலர் நக்கலாக பாக்யாவிடம் பேசி இருந்தார். கவுன்சிலர், நீ உன் பையனை வெளியில் அழைத்து வருவது ரொம்ப கஷ்டம் என்று சொன்னார். இதனால் பாக்கியா ரொம்பவே பதறி போனார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் கவுன்சிலர், ரொம்ப ஏளனமாக பாக்கியாவை பேசினார். கடைசி வரை பாக்கியா எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. பின் கவுன்சிலர், உன் மகனை உன்னால் முடிந்தால் வெளியில் எடு என்று சவால் விட்டார்.` அதற்குப்பின் வேதனையில் வெளியே வந்த பாக்கியா, செழியன் நிலையை நினத்து வருத்தப்பட்டார். அதற்கு பின் பாக்கியா, அமிர்தாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு அமிர்தா, நான் எப்போதும் உங்களுக்கு சப்போர்ட் செய்தேன். நீங்கள் செய்யும் வேலை எனக்கு பிடிக்கவில்லை என்று பாக்கியாவிடம் ரொம்ப கோபமாக பேசி இருந்தார்.

சீரியல் ட்ராக்:
அப்போது பாக்கியா, நான் எப்படியாவது செழியனை வெளியே கொண்டு வருகிறேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கவுன்சிலருக்கு ஆகாத ஒரு குரூப் அவனை திட்டிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கவனித்த பாக்கியா, கவுன்சிலரின் எதிரி குரூப் அமைச்சரை சந்திக்க அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். அங்கு வந்த கவுன்சிலர் பாக்கியாவை பார்த்தவுடன் ரோட்டிலேயே பயங்கரமாக சண்டை போட்டார். இதையெல்லாம் பார்த்த கவுன்சிலரின் எதிரி குரூப் பாக்கியாவிடம் தனியாக சந்தித்து பேச, பாக்கியா நடந்த உண்மை எல்லாம் அவர்களிடம் சொல்லி அமைச்சரை பார்க்க கேட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் அமைச்சரின் வீட்டிற்கு வெளியே பாக்யா காத்துக் கொண்டிருக்கிறார். கவுன்சிலரின் எதிரி குரூப், பாக்கியாவை உள்ளே அழைக்கிறார்கள். அப்போது அமைச்சருக்கு செய்த சமையல் சரியில்லை என்பதால் எதிரி குரூப் ரொம்பவே வேதனைப்படுகிறார்கள். உடனே பாக்கியா, நான் சமைத்து தருகிறேன் என்று சொல்கிறார். தேவையான பொருள்களை எல்லாம் அவர்களிடம் கேட்டு வாங்கி சமையலை பாக்கியா செய்து விடுகிறார். அதை பார்த்த கவுன்சிலர், பாக்கியாவிடம் சண்டை வாங்கி மிரட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் ஈஸ்வரி, பாக்யாவிற்கு போன் செய்கிறார். பாக்கியா, நான் ஒரு ஆர்டருக்கு வந்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் நான் உங்களிடம் அப்புறம் பேசுகிறேன் என்று போனை வைத்து விடுகிறார். இதனால் ஈஸ்வரி பயங்கரமாக கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






