விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடன போட்டியில் இனியாவுக்கு மூன்றாம் பரிசு தான் கிடைத்தது. கோபத்தில் இனியா ரொம்பவே கத்தி இருந்தார். அப்போது அவர், உங்களால் தான் நான் தோற்றேன். நீங்கள் எங்களுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் எல்லா பிரச்சினையும் என்று ரொம்ப மோசமாக ராதிகாவை பேசி விட்டார். ஆனால், எதுவுமே பேசாமல் வேதனையில் ராதிகா அங்கிருந்து கிளம்பி விட்டார். உடனே பாக்கியா, எல்லா பிரச்சனைக்கும் காரணம் கோபி தான் என்று புரிய வைத்தார்.
வழக்கம் போல் ஈஸ்வரி, கோபிக்கு சப்போர்ட் செய்து பாக்கியாவை திட்டி இருந்தார். ஆனால் பாக்கியா, நீ ராதிகாவை பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. எதுவாக இருந்தாலும் நீ உன் அப்பாவை தான் கேட்கணும் என்று சொன்னவுடன் இனியா கோபப்பட்டு உள்ளே சென்று விட்டார். பாக்கியா சொன்னது தான் சரி என்று நினைத்து கோபி வருத்தப்பட்டார். பின் பாக்கியா, இனியாவிடம் பேசி அவரை சமாதானம் செய்து விட்டார். இன்னொரு பக்கம் ராதிகா, இனியா சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
பாக்கியலட்சுமி :
அப்போது வந்த கோபி, நான் உன்னை அழைத்துக் கொண்டு போயிருக்கக் கூடாது. இந்த பிரச்சனை வந்திருக்காது. எல்லோருமே சந்தோஷமாக இருப்பார்கள் என்று தன்னுடைய குடும்பத்தை மட்டும் யோசித்து பேசி இருந்தார். கொஞ்சம் கூட ஒரு ராதிகாவின் நிலைமையை அவர் யோசிக்கவில்லை. மறுநாள் காலையில் பாக்கியா-ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராதிகா, எல்லோரும் வெளியே போகலாமா? நான் வீட்டில் எல்லோரையும் வரவைக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா ஒத்து கொண்டார்.
நேற்று எபிசோட்:
பின் இதைப் பற்றி ராதிகா, கோபியிடம் சொல்ல, அவரும் சம்மதித்து இனியா ஈஸ்வரிடம் பேச, அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். நேற்று எபிசோட்டில் பிக்னிக் செல்வதற்காக பாக்கியா சமைத்துக் கொண்டிருந்தார். வீட்டில் எல்லோருமே தயாராக இருந்தார்கள். அப்போது எழில்-அமிர்தா இருவருமே வந்து விட்டார்கள். ஒரு வழியாக எல்லோருமே பிக்னிக் கிளம்பி இருந்தார்கள். அப்போது ராதிகாவை பார்த்தவுடன் கோபப்பட்ட ஈஸ்வரி, ராதிகா வந்தால் நான் வர மாட்டேன் என்றார். கோபி, எடுத்து சொல்லியும் ஈஸ்வரி கேட்கவில்லை. ஆனால், ராதிகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
பின் கோபி தன்னுடைய அம்மாவை தனியாக அழைத்துக் கொண்டு போய், எனக்காக அவள் வரட்டும். ராதிகா பாவம் அம்மா. நான் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்கிறேன். டென்சன் ஆனால் எனக்கு நெஞ்சுவலி வரும் என்று ட்ராமா போட்டார். ஓரு வழியாக எல்லோருமே பிக்னிக் போனார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சந்தோசமாக பாக்கியா குடும்பத்தினர் பிக்னிக்கை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு விளையாட்டிலுமே கலந்து கொண்டு எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இதை எல்லாம் பார்த்து ராதிகா சந்தோசப்படுகிறார். இதை பார்த்து பாக்கியாவுக்கு சந்தேகம் வருகிறது. பின் பாக்கியா- ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்கியா, என்ன பிரச்சனை என்று கேட்க, ஒன்னும் இல்லை என்று ராதிகா சமாளிக்கிறார். அதற்கு பின் பாக்கியா, இந்த டூர் பிளான் போட்டது ராதிகா தான். ஆனால், இதற்குப் பின் ஏதாவது ஒரு காரணம் இருக்கு என்று எழிலிடம் சொல்கிறார். நல்லபடியாக பிக்னிக்கை முடித்து எல்லோருமே வீட்டிற்கு வருகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது