விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் புது ஆர்டரை சுதப்பி பாக்கியாவை மாட்டி விட வேண்டும் என்று கோபி- செப் ஆனந்த் மீண்டும் திட்டம் போட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் படத்தின் பூஜைக்காக எல்லோருமே வந்தார்கள். எழில் தன் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது தயாரிப்பாளர், எல்லா டாக்குமென்டில் கையெழுத்து வாங்கி, இந்த பூஜைக்கு உங்களுடைய அம்மா வரக்கூடாது என்கிறார். உடனே கோபி, உன்னுடைய அம்மா இங்கே வரக்கூடாது என்று மிரட்ட, எழிலுக்கு பயங்கர கோபம் வந்தது.

பின் தனியாக சென்று எழில் வருத்தப்பட்டார். அப்போது பூஜைக்கு வந்த பாக்கியாவை பார்த்து எழில், நீ உள்ளே வர வேண்டாம். கிளம்பி போ என்று சொல்ல, பாக்கியாவும் மனம் உடைந்து அழுது கொண்டு வெளியே போனார். பின் எழில், தன் படத்திற்கான டைட்டிலில் பாக்கியலட்சுமி என்று வைத்து இருந்தார். அதை பார்த்த உடனே எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், கோபி ஷாக்கி கோபப்பட்டார். பின் எழில், தன்னுடைய அம்மாவை பற்றி ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
இதையெல்லாம் வெளியில் நின்று கேட்ட பாக்யா ஆனந்தத்தில் அழுதார். நேற்று எபிசோட்டில் எழில், தன் அம்மாவிடம் பேசியதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார். இன்னொரு பின் வீட்டில் பாக்கியா, ஈஸ்வரிடம் புதிய ஆர்டரை பற்றி பேசி இருந்தார். ஆனால், எழில் பூஜையில் நடந்த விஷயத்தை ஈஸ்வரி கேட்க, பாக்கியா எதுவுமே சொல்லவில்லை. பின் தன்னுடைய மாமியாரை புதிய ஆர்டருக்கு வலுக்கட்டாயமாக ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து வந்தார் பாக்கியா. அங்கு விறுவிறுப்பாக வேலைகள் எல்லாமே நடந்து கொண்டிருந்தது.

நேற்று எபிசோட்:
இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று செஃப் ஆனந்த் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் ஈஸ்வரி, பூஜையை நடத்தி எல்லோருக்கு ஆர்டரை செய்ய சொன்னார். நேற்று எபிசோடில் ஜெனி- செழியன்- இனியா மூவருமே காரில் பேசிக் கொண்டு வந்தார்கள். அப்போது செழியன், இனியா இருவருமே எழிலின் பூஜைக்கு பாக்கியா வராததை குறித்து திட்டி கொண்டு இருக்க, பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து ஜெனி பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் பாக்கியவுடன் மற்ற பெண்கள் எல்லோருமே கண் விழித்து தூங்காமல் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
ஈஸ்வரியும் அவர்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். பின் கோபி, எழில் பூஜையில் பாக்யா அவமானப்பட்டதை நினைத்து சந்தோஷப்பட்டு ராதிகாவிடம் சொல்லி இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், ஆர்டரை நல்லபடியாக பாக்யா செய்து முடித்து வருகிறார். அப்போது ஆனந்திற்கு கோபி போன் செய்கிறார். இதை அறிந்த பாக்கியா, ஆனந்தை பேச சொல்கிறார். கோபி, போன முறை கெட்டு போன சிக்கனில் பிரியாணி கொடுத்தீர்கள். இந்த முறை என்ன? என்று கேட்க, ஆனந்த் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இதையெல்லாம் கேட்டு எல்லோரும் ஷாக்காக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது பாக்கியா, எனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும். இந்த பிரச்சனை நடந்தபோதே ஆனந்த் வீட்டிற்கு போனேன். நான் சமைத்த பிரியாணியை அவருடைய மகள் சாப்பிட்டு ஹாஸ்பிடலில் சீரியஸாக இருந்தார். அப்போதுதான் அவர் செய்த தவறை உணர்ந்தார். நான்தான் கோபியிடம் நடிக்க சொல்லி இருந்தேன். இந்த விஷயம் என் மாமியாருக்கும் தெரியும் என்கிறார். உடனே ஈஸ்வரி, ஆனந்த் சொன்ன விஷயத்தை பற்றி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






