விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்ததால் மொத்த குடும்பமும் வேதனையில் இருக்கிறது. ராமமூர்த்திக்கு இறுதி சடங்கை கோபி செய்ய கூடாது பாக்கியா தான் செய்யணும் என்று ஈஸ்வரி சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை எல்லாம் செய்தார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். மேலும், ராமமூர்த்தி கடிதம் எழுதி வைத்த விஷயம் தெரிந்து அனைவருமே அழுதார்கள். பின் ஒவ்வொருவருக்கும் தாத்தா எழுதிய கடிதத்தை படித்து வருத்தப்பட்டார்கள்.
இதையெல்லாம் வாசலில் நின்று ராமமூர்த்தி ஆத்மா பார்த்தது. இந்த வாரம் ரெஸ்டாரண்டில் பாக்கியா தன்னுடைய மாமனாரை நினைத்து வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்க, பழனிச்சாமி ஆறுதல் சொல்லி இருந்தார். வீட்டில் ஈஸ்வரி, தன்னுடைய கணவரின் 80 ஆவது பிறந்தநாள் வீடியோவை பார்த்து அழுது கொண்டிருக்க, செழியன்- ஜெனி இருவருமே சமாதானம் செய்தார்கள். அதன் பின் கோபி-செழியன் இருவருமே பேசும் போது தாத்தா படத்தை திறக்கும் விழாவை பற்றி செழியன் சொன்னவுடன் கோபி, பாக்கியாவை தான் திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
மறுநாள் ராமமூர்த்தியின் திருவுருவப்படத்தை கடையில் திறக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கோபியும் வந்தார். அதற்குப் பின் ராமமூர்த்தி திருவுருவப்படத்தை ஈஸ்வரி திறந்து வைத்தார். எல்லோருமே அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தி அவரை பற்றி பெருமையாக பேசிய இருந்தார்கள். கடைசியில் கோபி மைக்கை வாங்கி, தான் நல்ல அப்பா என்றும், ராமமூர்த்தியை பற்றி திட்டியும் பேச எல்லோருமே கோபப்பட்டார்கள். நேற்று எபிசோட்டில் பாக்கியா, கோபியை சந்தித்து நீங்கள் கொடுத்த சொற்பொழிவு எல்லாம் சரி, நீங்கள் என்னைக்கு உங்களுடைய பிள்ளைக்கு சரியான தந்தையாக இருந்தீர்கள்? என்று கேட்டவுடன் கோபி ஆத்திரத்தில் கத்த, பாக்கியா பதில் கொடுத்தார்
நேற்று எபிசோட்:
அதன் கோபி ரெஸ்டாரண்டில் தன்னுடைய நண்பரிடம், பாக்யா ரெஸ்டாரண்டில் நடந்ததையும், தன்னுடைய அப்பாவை பற்றி பேசியதையும் குறித்து சொல்லிக் கொண்டிருக்க, அவர் ஆறுதல் சொல்லியும் கோபி ஏற்றுக்கொள்ளாமல் பாக்கியா மீது வன்மத்தை கொட்டுகிறார். கடைசியில் பாக்கியா-எழில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது எழில், வீடு பார்த்து விட்டேன். நீங்கள் வர வேண்டும் என்று சொன்னவுடன் பாக்யாவும் வருகிறேன் என்று அறிவுரை சொல்லி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், எழில் புது வீட்டிற்கு பாக்கியா போகிறார்.
இன்றைய எபிசோட்:
அப்போது, புது வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் பாக்யா வாங்கிக் கொண்டு வந்து தருகிறார். அதை பார்த்து எழில்-அமிர்தா சந்தோசப்பட்டு புது வீட்டில் பால் காய்ச்சி சாமி கும்பிடுகிறார்கள். அதற்கு பின் அமிர்தாவின் அம்மா, எழிலுக்கு வேலை இல்லை என்று ரொம்ப கஷ்டப்படுகிறார். அதற்கு பாக்கியா, அவன் சாதித்து வருவான். அங்கிருந்தால் தேவையில்லாத பிரச்சினை. அதனால்தான் நான் வெளியில் போக சொன்னேன். கண்டிப்பாக ஒருநாள் என் மகன் சாதிப்பான். அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பேசுவதை வெளியில் இருந்து எழில் கேட்டு கண் கலங்குகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் வீட்டில் ஈஸ்வரி, இனியா, பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எழில் புது வீட்டுக்குப் போன விஷயத்தை பாக்யா சொல்ல இனியா சந்தோஷப்பட்டு பேசுகிறார். அப்போது ஈஸ்வரி, எல்லோரும் என்னை விட்டு போகிறார்கள் என்று வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் செழியன், ஜெனி இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெனி, உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுவும் சொல்லாமல் மறைக்கிறாயா? மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க, ஒன்னும் இல்லை ஆபீஸ் பிரச்சனை தான் என்று செழியன் சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.