விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, கோபியை வாக்கிங் போகலாம் என்று அழைத்தார். அப்போது ராதிகா, நான் அழைத்துப் போகிறேன் என்று சொன்னார். ஈஸ்வரி தடுத்துமே ராதிகா கேட்கவில்லை. பின் ராதிகா- கோபி இருவரும் வாக்கிங் போனார்கள். ஆனால், வேகமாக கோபியால் நடக்க முடியவில்லை. அவர் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டார். பின் பாக்கியாவை பார்த்தவுடன் ராதிகா சேர்ந்து நடந்தார். இதை பார்த்த ஈஸ்வரி, ராதிகாவை பற்றி கோபியிடம் கோல் மூட்டி கொண்டு இருந்தார். பின் வீட்டிற்கு வந்த கோபி, மையூவிற்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் இனியாவுக்கு கோபம் வந்தது.

உடனே அவர், தன்னுடைய அப்பாவிடம் கல்லூரியை பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஆனால், கோபி அதை கேட்காமல் மையூவுக்கு பாடம் சொல்லி கொடுத்தார். இதனால் ஈஸ்வரி-இனியாவுக்கு கோபம் வந்தது. ஆத்திரத்தில் ஈஸ்வரி, மையூவை மோசமாக பேசி விட்டார். இதை பார்த்தவுடன் ராதிகா, தன்னுடைய மகளை அழைத்து போனார். நேற்று எபிசோட்டில் கோபியை ஹாஸ்பிடலுக்கு ராதிகா அழைத்துப் போக வந்தார். உடனே ஈஸ்வரி, நான் என் மகனை அழைத்து போகிறேன் என்று தடுத்தார். ஆனால், ராதிகா கேட்கவில்லை. இதனால் ராதிகா- ஈஸ்வரிக்கு இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது.
பாக்கியலட்சுமி:
கடைசியில் கோபி இருவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து போனார். அங்கு டாக்டரை பார்க்க போகவும் இருவரும் சண்டை போட்டார்கள். ஒரு வழியாக ராதிகா தான் கோபியை அழைத்துக்கொண்டு உள்ளே போனார். இதனால் ஈஸ்வரிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. பின் வெளியே வந்த கோபியிடம் ஈஸ்வரி விசாரிக்க, ராதிகா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கோபியை அழைத்துக் கொண்டு வந்தார். இது எல்லாம் நினைத்து ஈஸ்வரி, பாக்கியாவிடம் புலம்பியிருந்தார். பின் வீட்டிற்கு வந்த கோபியிடம் ஹாஸ்பிடலில் நடந்ததை பற்றி ஈஸ்வரி கேட்டு, நான் உனக்கு முக்கியம் இல்லையா? என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
மேலும், இன்றைய எபிசோட்டில் கோபி, தன்னுடைய அம்மா, பிள்ளைகளோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ராதிகாவிற்கு கோபம் தான் வருகிறது. ஆனால், எதுவும் பேச முடியாமல் அமைதியாக தன்னுடைய வேலையை செய்கிறார். இரவு முழுவதுமே தூங்காமல் கோபி தன்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக விளையாடியும் பேசிக் கொண்டும் இருக்கிறார். மையூ, பாக்கியா உடனே தூங்கிக் கொள்கிறேன் என்று சொன்னதால் ராதிகாவிற்கு தனிமையில் இருப்பது போல உணர்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் பாக்கியா, ஈஸ்வரிக்காக காபி கொண்டு வந்து தந்தார். ராதிகாவும் கோபிக்காக காபி போட்டு இருக்கிறார். உடனே கோபி, பாக்கியா கொடுத்த காபியை குடித்தவுடன்பாராட்டி விட்டு செல்கிறார். இதையெல்லாம் பார்த்து ராதிகாவிற்கு கோபம் அதிகமாகி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். ராதிகாவை வெறுப்பேற்றுவதற்கு ஈஸ்வரி தேவையில்லாத வேலைகள் எல்லாம் செய்கிறார். பின் எழில், அமிர்தா வீட்டிற்கு வந்தார்கள். அப்போது ராதிகா, மையூவை அங்கிருந்து அழைத்து சென்று விடுகிறார். கோபி, மொத்த குடும்பமே சந்தோஷமாக கலகலப்பாக இருக்கிறது. இது எல்லாம் பார்த்து ராதிகாவிற்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை.
https://www.youtube.com/watch?v=LUvYIemRNi4
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்கியா வீட்டிற்கு வந்த கொரியரை செழியன் வாங்கிப் படிக்கிறார். அதில் கோபி மீது பாக்கியா கொடுத்த புகார் தொடர்பாக இயரிங் வந்திருக்கிறது. இதைக் கேட்டவுடன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். ஈஸ்வரி, நீ இன்னும் இந்த கேசை வாபஸ் வாங்கவில்லையா? ஏன் இப்படி செய்கிறாய்? என்று பாக்கியா மீது கோபப்படுகிறார். உடனே கோபி, நான் செய்தது தவறு. எதுவாக இருந்தாலும் நான் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். பின் கோர்ட்டில் கோபி -பாக்கியா இருவருமே ஆஜராகிறார்கள். அப்போது நீதிபதி பாக்கியா கொடுத்த புகார் தொடர்பாக விசாரிக்கிறார்.






