-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

ஈஸ்வரி சொன்ன வார்த்தை, பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு வந்த சோதனை – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
119

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் யுபிஎஸ் எக்ஸாம் தேர்வு நடைபெறுகிறது என்று செய்தி வந்தவுடன் இனியா, ஆகாஷை நினைத்துப் பார்த்தார். பின் ஆகாசுக்கு வாழ்த்துக்கள் சொல்ல எழில் இடம் இனியா போன் கேட்டார். ஆனால், எழில் முடியாது என்று மறுத்தார். அதற்குப்பின் எழில், இனியாவை அழைத்துக் கொண்டு ஆகாஷ் வீட்டுக்கு சென்றார். அப்போது ஆகாசிடம் எழில், உனக்கு வாழ்த்துக்கள் சொல்ல வந்தோம் என்று சொன்னார். பின் இனியா- ஆகாஷ் இருவரும் பார்த்துக்கொண்டவுடன் எமோஷனலாக கண்கலங்கி இருந்தார்கள். இருந்தாலுமே பாக்கியாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

-விளம்பரம்-

பின் இனியா, ஆகாசுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். அந்த சமயம் பார்த்து வந்த ஆகாஷின் அப்பா, இனியா-எழிலை திட்டி இருந்தார். உடனே ஆகாஷ், தன் அப்பாவை தடுத்து நிறுத்தி அவர்களை அனுப்பி விட்டார். அதற்கு பின் நான் இதைப் பற்றி எல்லாம் பாக்கியாவிடம் எழில்-இனியா இருவரும் சொல்லி விடுவதால் பாக்யாவும் கோவப்படாமல் சரி என்றார். இன்னொரு பக்கம் செல்வியின் கணவர், இனிமேல் உங்கள் மகள் எங்கள் வீட்டிற்கு வந்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி விட்டு சென்றார். இதனால் ஈஸ்வரி-கோபி இருவருமே கோபப்பட்டார்கள். கடைசியில் எழில்-இனியா-பாக்கியா மூவரும் வீட்டிற்கு வந்தார்கள்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, இனியா எதற்காக ஆகாஷை பார்க்க போனாள்? செல்வியின் கணவன் ரொம்ப மோசமாக சண்டை போட்டு போறான் என்று தாண்டவம் ஆடி இருந்தார். பாக்கியா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். உடனே எழில், நான் தான் இனியாவை அழைத்துக் கொண்டு போனேன். ஆகாஷ்க்கு தேர்வு நடப்பதால் வாழ்த்துக்கள் சொல்ல போனால் என்று சொன்னவுடன் கோபி- ஈஸ்வரி இருவருமே கோபப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் பாக்கியா, இதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் தேவை இல்லாமல் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

-விளம்பரம்-

பின் ஈஸ்வரி, நான் இந்த வீட்டிலேயே இல்லை. என் மகனுடன் கிளம்புகிறேன் என்று சொன்னார். அதற்கு பாக்கியா, தாராளமாக கிளம்புங்கள். போகும்போது மாத்திரை எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொன்னவுடன் ஈஸ்வரிக்கு ஒரே ஷாக். கோபி-ஈஸ்வரி இருவருமே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்கள். இனியாவுமே தன் தந்தையை தடுக்கவே இல்லை. சில மாதங்களுக்கு பிறகு இனியாவிற்கு ரிப்போர்ட்டர் வேலை கிடைத்தது. பின் இந்த விஷயத்தை தன்னுடைய அப்பா, பாட்டியிடம் சொல்ல இனியா வீட்டிற்கு போனார். கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, முதல் நாள் வேலைக்கு கிளம்புவதற்கு தயாராகி செல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே அவருக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். பாக்கியா, தன்னுடைய மகளை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் தன்னுடைய மாமியாரை சந்தித்த பாக்கியா, நீங்கள் நம் வீட்டிற்கு வந்து விடுங்கள். ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, என் மகனை தனியாக்கி விட்டீர்கள். நான் அவனை விட்டு வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். எதுவுமே பேச முடியவில்லை பாக்கியா கிளம்பி வந்து விடுகிறார். அதற்கு பின் டிவியில் இனியா செய்தி வாசிப்பதை பார்த்து எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் யூபிஎஸ்சி தேர்வில் ஆகாஷ் பெயில் ஆகி விடுவதாக தகவல் வருகிறது. இதை கேட்டவுடன் ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதோடு இனியாவுக்கு எப்படியாவது கல்யாணம் செய்து வைத்து விடணும் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் இனியா, பாக்கியா வருத்தப்படுகிறார்கள். செல்வி, என் மகன் ரொம்ப கஷ்டப்பட்டான். ஆனால், இப்படி நடந்திருக்கக்கூடாது என்று வருத்தமாக பாக்யாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து ரெஸ்டாரண்டுக்கு நாலு பேர் வருகிறார்கள். அவர்கள், இந்த ஓட்டலை எங்க ஓனர் விலைக்கு வாங்கப் போகிறார். இதை விற்கப் போகிறீர்களா? என்று கேட்க, பாக்கியா ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news