விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா பர்த்டே பார்ட்டி முடிந்ததும் பாக்கியா வீட்டில் எல்லோருமே கிளம்பினார்கள். உடனே இனியா, தன்னுடைய அப்பாவை மட்டும் இருக்க சொன்னார். பின் இனியா- கோபி இருவரும் தனியாக பேசி இருந்தார்கள். அப்போது இனியா, நீங்கள் எனக்காக பார்த்த மாப்பிள்ளை எப்படிப்பட்டவர் என்று விசாரித்தீர்களா? உங்களுக்கு அவரைப் பற்றி ஏதாவது தெரியுமா? என்று கேட்டார். கோபிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் இனியா, நிதிஷ் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கைதான விஷயத்தை பற்றி சொன்னார். கோபி பயங்கர ஷாக் ஆனார். பின் இனியா எல்லா ஆதாரங்களையும் காண்பித்தார். இதனால் கோபி ரொம்பவே மனமடைந்து அழுதார்.

பின் இனியா-கோபி இருவருமே சுதாகரிடம் நடந்ததை பற்றி கேட்டார்கள். அதற்கு சுதாகர், இது பெரிய விஷயம் இல்லை. தெரியாமல் சின்ன வயதில் தவறு செய்து விட்டான். அதை விட்டு விடுங்கள் என்று கூலாக சொன்னார். இதனால் கோபி- சுதாகர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. கடைசியில் கோபி, என் மகளை என் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றார். அப்போது சுதாகரின் மனைவி, கல்யாணமான உடனே உங்கள் மகள் உங்கள் வீட்டுக்கு வந்தால் நாலு பேர் தப்பாக பேச மாட்டார்களா? என்று சொன்னார். அதற்கு கோபி, எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் இனியா, நான் பார்த்துக்கொள்கிறேன். பிரச்சனை என்றால் உங்களை அழைக்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருங்கள் என்று கோபிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். அதற்கு பின் இனியாவிடம் சுதாகர், ரொம்ப நன்றி இனியா. நிதிஷ் சீக்கிரமாகவே மாறிவிடுவான். இந்த வீட்டில் உனக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொன்னார். அதற்கு இனியா எதுவுமே பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அதற்குப் பின் நிதிஷ் வீட்டிற்கு வந்தார். வழக்கம் போல் அவர் போதை பொருளை பயன்படுத்தி இருந்தார். இதை பார்த்த சுதாகர் பயங்கரமாக நிதிஷ் மீது கோபப்பட்டார். இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய மகளின் வாழ்க்கையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:
வீட்டிற்கு வந்த கோபி சரியாக யாரிடமும் பேசவில்லை. இதை பார்த்த பாக்கியாவிற்கு சந்தேகம் வந்தது. பின் பாக்கியா, இனியாவிற்கு ஏதாவது பிரச்சனையா? உங்களை ஏன் தனியாக சந்தித்து பேசினார் என்று கேட்டார். ஆனால், கோபி உண்மையை சொல்லாமல் ஏதோ சொல்லி சமாளித்தார். மறுநாள் காலையில் இனியா வேலைக்கு கிளம்பினார். அப்போது நிதிஷ், பிறந்தநாள் பரிசு கொடுத்தார். இனியா அதை வாங்கிக்கொண்டு வேலைக்கு கிளம்பினார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த கோபி, இனியாவை நான் அழைத்து செல்கிறேன் என்றார். பின் வரும் வழியில் கோபி, ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டார் அதற்கு இனியா, எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, நிதிஷின் அப்பா எல்லோருமே என்னிடம் நன்றாக தான் நடந்து கொள்கிறார்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். இதே மாதிரி அம்மாவுடைய அம்மா ஒரு பிரச்சனை என்றால் நீங்கள் முகம் கொடுத்து கூட கேட்க மாட்டீர்கள். உங்கள் மகளுக்கு என்று பிரச்சினை வரும் போது தான் அந்த வலி புரிகிறதா? என்று கேட்கிறார். இனியா கேட்ட கேள்விக்கு கோபியால் பதில் சொல்லமுடியாது ரொம்ப வருத்தப்படுகிறார். அதற்குப்பின் இனியா, பாக்கியாவின் ஹோட்டலுக்கு வருகிறார். அப்போது பாக்கியா, கடையை டெவலப் செய்வதற்கு ஏதாவது ஐடியா இருந்தால் சொல் என்று இனியாவிடம் கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு இனியா, பைவ் ஸ்டார் ஓட்டலில் மொத்தம் ஆறு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அதில் ஓரு ரெஸ்டாரண்ட் கான்ட்ராக்டில் விடுகிறார்கள். அந்த போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதைக் கேட்டவுடன் பாக்கியா முடியாது என்கிறார். ஆனால், இனியா தன்னுடைய அம்மாவை வலுக்கட்டாயமாக அந்த போட்டி நடத்தும் இடத்திற்கு அழைத்து சென்று பாக்கியாவின் பெயரைக் கொடுக்கிறார். அங்கு போட்டியை ஏற்பாடு செய்த மேனேஜர், இது ஒன்னும் வீட்டு சமையல் செய்யும் வேலை இல்லை. பெரிய பெரிய செப்புகள் கலந்து கொள்ளும் போட்டி என்று ஏளனமாக பேசுகிறார். இதை கேட்டு பாக்கியா, என்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் பேசி விட்டு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






