விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோர்ட்டில் கோபி- ராதிகா வழக்கு நடந்தது. அப்போது ராதிகா தரப்பில், இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை. விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோபி ரொம்பவே மனமுடைந்து விட்டார். பின் கோபியும்
சம்மதம் சொல்லி விட்டார். கடைசியில் நீதிபதி, இருவருக்குமே விவாகரத்தை கொடுத்து விட்டார். அதற்குப்பின் ராதிகா- பாக்கியா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது பாக்கியா, நீங்கள் இந்த முடிவை எடுப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. இனி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ராதிகா, எனக்கு தெரியவில்லை. இனி நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை பாருங்கள் என்று சொன்னார். அதற்கு பின் கோபியிடம் ராதிகா, உங்கள் வீட்டிற்கு அழைத்து போக முடியமா? என்று கேட்க, கோபி-ராதிகா இருவரும் காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கோபி, இதோடு நம் உறவு முடியும் என்று நான் நினைக்கவே இல்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இதைக் கேட்டவுடன் ராதிகாவிற்கு கஷ்டமாக இருந்தது.
பாக்கியலட்சுமி:
இன்னொரு பக்கம் வீட்டில் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடந்ததோ? என்று புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கோபி-ராதிகா இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் இனியா- ஈஸ்வரி இருவருமே பயப்பட்டார்கள்.
அப்போது ராதிகா, எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. உங்களை எல்லாம் பார்த்துவிட்டு போக தான் வந்தேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். ராதிகா சொல்வதைக் கேட்டு ஈஸ்வரி கண்கலங்கி அழுதார். அதற்குப்பின் இனியா, மயூவிற்காக மேக்கப் கிட் கொடுத்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் ராதிகா, எல்லோரிடமும் எமோஷனலாக மன்னிப்பு கேட்டு சந்தோஷமாக பேசி இருந்தார். பின் எல்லோரிடமும் சொல்லிவிட்டு மொத்தமாகவே கோபியின் வாழ்க்கை விட்டு ராதிகா சென்று விட்டார். இதையெல்லாம் பார்த்து கோபிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் எமோஷனலாக தன்னுடைய அம்மாவிடம் பேசிவிட்டு கோபி சென்றார். அதற்கு பின் ஈஸ்வரி, நான் என்னுடைய மகனை சரியாக வளர்த்து இருந்தால் உன்னையே விவாகரத்து செய்திருக்க மாட்டான். என் மீது தான் தவறு என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
அதற்கு பின் எழில் வீட்டிற்கு வந்தார். அவர் தன் அம்மா, புதிதாக ரெஸ்டாரன்ட் திறப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, தன்னுடைய புது ரெஸ்டாரண்டை திறப்பதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். எல்லோருமே ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்காக வந்து விடுகிறார்கள். ஈஸ்வரி கையால் ரெஸ்டாரன்ட் திறக்கப்படுகிறது. இது எல்லாம் பார்த்து கோபி, ரொம்ப பெருமையாக பாக்கியாவை பற்றி பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
அது மட்டும் இல்லாமல் பாக்கியாவுக்கு வாழ்த்தும் சொல்லி பொக்கை கொடுக்கிறார். அதற்குப்பின் இனியா காதலிக்கும் அங்கு வருகிறார். அவர் வேறு யாருமில்லை செல்வியின் மகன் தான். வீட்டில் உள்ள எல்லோரிடமும் செல்வியின் மகன் ரொம்ப அன்பாக பேசுகிறார். ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. அதற்குப்பின் ஈஸ்வரி, செழியன்-அமிர்தாவை மீண்டும் வீட்டிற்கு வரச் சொல்லி அழைக்கிறார். அவர்கள் ஏதோ சொல்லி சமாளிக்கிறார்கள். உடனே கோபி, எதுவாக இருந்தாலும் வீட்டில் பேசிக் கொள்ளலாம் என்று அவருடைய அம்மாவை சமாதானம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.