தன்னுடைய கனவை நோக்கி ஓடும் பாக்கியா, தடைகளை முறியடிப்பாரா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
160
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு போனார். அங்கு சுதாகரும் பழைய ஒனரும் பேசி இருப்பதை பார்த்து அவருக்கு கோபம் வந்தது. உடனே சுதாகர், நான் இப்போது தான் இவரை பார்த்தேன். இவர் தான் இந்த ஓட்டலை வாங்கி இருக்கிறார் என்று வேறொருவரை கை காண்பித்து திருப்பவும் கோபியை ஏமாற்றி விட்டார். கோபியும் அதை நம்பி பாக்கியாவிடம் பேசி இருந்தார். ஆனால், பாக்கியா எதையுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் ரெஸ்டாரண்டை காலி செய்து மொத்த பெண்களுமே வேலை போனதை நினைத்து பாக்கியாவிடம் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

ரெஸ்டாரண்டுக்கு வந்த பழைய ஓனர் பாக்யாவிடம் செட்டில்மெண்ட் பணத்தை கொடுத்து விட்டு ரெஸ்டாரண்டை காலி செய்ய சொன்னார். அதற்கு பாக்கியா, இதை நீங்களாவே சொல்லி இருந்தால் எனக்கு கவலை இல்லை. சுதாகர் சொல்லி ரெஸ்டாரண்டை காலி செய்ய சொன்னது தான் கஷ்டமாக இருந்தது. இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் எனக்கு செய்ய வேண்டியது இல்லை என்று ரொம்ப பேச அவரால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் வங்கிக்கு சென்ற பாக்கியா ரெஸ்டாரன்ட் மீது இருக்கும் லோனை பற்றி விசாரித்தார். இன்னொரு பக்கம் வீட்டில் சுதாகர் எல்லோரிடமும் எதுவுமே நடக்காதது போல பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் பாக்கியாவுக்கு கோபம் அதிகமானது.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

அப்போது சுதாகர், ரெஸ்டாரண்டை பற்றி பேசி இருந்தார். உடனே பாக்கியா, உங்கள் மனதிற்கு கஷ்டம் இல்லை என்றால் ரெஸ்டாரன்ட்டுக்கு தேவையான பணத்தை நீங்கள் கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு குற்ற உணர்ச்சி வேணாம் என்று சொன்னவுடன் சுதாகரால் எதுவும் பேசவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே பணமெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள். அதற்கு பாக்கியா, அவருடைய வழியிலேயே போய் பதிலடி கொடுத்தார். சுதாகரால் எதுவும் பேச முடியாமல் நாளை வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கோபி, எதற்காக பணத்தை கேட்டாய் என்று கேட்டவுடன் பாக்கியா, ரெஸ்டாரண்டுக்கு வாங்கிய லோன் அப்படியே இருக்கு. எப்படி கட்டுவது என்றவுடன் வீட்டில் யாராலும் பேச முடியவில்லை.

கடந்த வாரம் எபிசோட்:

பாக்கியா பணத்தைப் பற்றி டீலிங் பேசி இருந்தார். சுதாகர் 20 லட்சம் தான் தர முடியும் என்றார். அதற்கு பாக்கியா, முடியாது 60 லட்சம் தருணம் என்று கேட்கிறார். ஒரு வழியாக இருவருடைய பஞ்சாயத்து முடிந்து சுதாகர் நாற்பது லட்சம் தான் ஃபைனலாக கொடுக்க முடியும் என்று கொடுத்தார். இதனால் பாக்கியா, பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார். ஆனால், சுதாகருக்கு கோபம் இன்னும் அதிகமானது. பின் வீட்டிற்கு வந்த பாக்கியா, தன்னை நம்பி இருந்தவர்களுக்கு கொஞ்சம் பணத்தை பிரித்துக் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் இன்னும் அதிகமானது. ஆனால், கோபி தான் பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எழில்-செழியன் இருவருமே நீ நிம்மதியாக வீட்டில் இரு அம்மா. குடும்பத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தன்னுடைய அம்மாவிற்கு சப்போர்ட்டாக பேசுகிறார்கள். இதை எல்லாம் பார்த்து கோபி, ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார்கள். அப்போது ஈஸ்வரி, நீ இனிமேல் எந்த ரெஸ்டாரண்டையும் நடத்த வேண்டாம். பிள்ளைகளோடு வீட்டில் சந்தோஷமாக நிம்மதியாக இரு என்று சொல்கிறார். ஆனால், பாக்கியா எதுவும் சொல்லவில்லை. பின் பாக்கியா வாக்கிங் செல்லும்போது எல்லோருமே ரெஸ்டாரண்ட் இழந்த விஷயம் பற்றி கேட்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அது பாக்கியாவிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதற்குப்பின் பாக்கியா, செல்வியை வரவைத்து புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க இடங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொல்கிறார். அதில் ஒருவர், பாக்கியா விவாகரத்து ஆன விஷயத்தை பற்றி கேட்கிறார். இதனால் பாக்கியாவுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement