விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் மண்டபத்தில் நிச்சயதார்த்தத்திற்கு முன்பு நடைபெறுவதற்கு முன்பு சுதாகரிடம் பாக்கியா குடும்பம் பேசி இருந்தார்கள். அப்போது பாக்கியா, ரெஸ்டாரண்டில் பெயர் மட்டும்தான் மாறும் என்றால் எனக்கு சம்மதம். ஆனால், எதுவாக இருந்தாலும் அக்ரிமெண்ட் போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னவுடன் சுதாகர் ஷாக் ஆனார். எப்படியாவது ரெஸ்டாரண்டை எடுக்க நினைத்தார். பாக்கியா குடும்பம் கொஞ்சம் ரொம்ப புத்திசாலித்தனமாக இருப்பதால் அதை வேற மாதிரி டீல் செய்ய வேண்டும் என்று தன்னுடைய மேனேஜரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சுதாகர்.

சுதாகர், எம்டியாக இருக்கும் டாக்குமென்டை கொடுத்து கையெழுத்து போட சொன்னார். பாக்கியா, எதுவுமே எழுதவில்லை. எப்படி கையெழுத்து போடுவது என்று கேட்டார். அதற்கு சுதாகர், நான் அப்புறமாக எழுதிக் கொள்கிறேன். திடீரென்று சொன்னதால் இதில்கையெழுத்து போடுங்கள். நான் இங்கு சொன்னதை தான் ஒரு வரி மாறாமல் எழுதிவிடுகிறேன். வேறு எதுவும் எழுத மாட்டேன் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார். கோபி, ஈஸ்வரி எல்லோருமே பாக்கியாவை கையெழுத்து போட சொன்னார்கள். ஆனால், அரை மனதோடு தான் பாக்கியா விருப்பமே இல்லாமல் தன் மகளுக்காக கையெழுத்து போட்டு கொடுத்தார்.
பாக்கியலட்சுமி:
பின் தன்னுடைய வருங்கால மருமகன் இடம் பாக்கியா ரொம்ப எமோஷனலாக இனியாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. மணக்கோலத்தில் இனியா தயாராகி மேடைக்கு வந்தார். வீட்டில் உள்ள எல்லோரும் இனியாவை ரொம்ப எமோஷனல் ஆகி இருந்தார்கள். அப்போது பாக்கியாவை அழைத்த இனியா, உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால் சொல்லுங்கள். நான் இப்போதே கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன் என்று சொன்னார். ஆனால், பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என்று தடுத்து விட்டார். இனியாவிற்கு நல்லபடியாக திருமணம் நடக்கிறது. இனியா எல்லோரிடமும் சென்று ஆசீர்வாதம் வாங்கி இருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில் இனியாவிற்கு நல்லபடியாக திருமணம் முடிந்தது. வீட்டில் உள்ள எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கி ரொம்ப எமோசனலாக இனியா பேசிக் கொண்டிருந்தார்.
பின் பாக்யாவின் வீட்டிற்கு இனியாவையும் அவருடைய கணவரையும் அழைத்து சென்றார்கள். அங்கு பாக்கியா,உன் படிப்பையும் வேலையையும் விட்டு விடாதே என்று அறிவுரை சொன்னார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசிவிட்டு அழுது கொண்டே இனியா தன்னுடைய கணவர் வீட்டுக்கு சொன்னார். பின் இனியா மாமியார் வீட்டில் அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்து உபசரித்தார்கள். அதுமட்டுமில்லாமல் இனியாவை விளக்கேற்றி வைத்து சாமி கும்பிட சொன்னார்கள். நல்லபடியாக எல்லா சடங்குகளையுமே முடித்து விட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் இனியாவை அவருடைய கணவர் வீட்டில் விட்டுட்டு அவருடைய அண்ணன் அண்ணிகளும் வந்து விடுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே இனியாவை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பின் இனியா தன்னுடைய கணவர் வீட்டில் எல்லோரிடமும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது மாற்றி மாற்றி இனியா வீட்டில் இருந்து எல்லோருமே கால் செய்து கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தன்னுடைய மகனிடம் செல்வி, தயவு செய்து படி. இனியா கல்யாணமாகி சென்று விட்டாள்.

சீரியல் ட்ராக்:
நம்முடைய குடும்பத்தை பாரு. நம்மை அவமானப்படுத்தியதற்காக படி என்று அறிவுரை சொல்கிறார்.
அதற்குப்பின் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார். அங்கு வந்த சுதாகர், டாக்குமெண்டை காண்பிக்கிறார். அதை படித்து பார்த்தவுடன் பாக்கியா ஷாக் ஆகிறார். அதில் ரெஸ்டாரண்டை மொத்தமாகவே சுதாகருக்கு எழுதி கொடுத்தது போல் மாற்றி எழுதி விடுகிறார். அதை பார்த்து பாக்கியா ரொம்பவே மனமடைந்து விடுகிறார். அதைக் கேட்டதற்கு சுதாகர், உங்கள் மகள் பெயர்தான் இருக்கிறது. என்று நக்கலாக பேசுகிறார். எதுவும் பேச முடியாமல் பாக்கியா வீட்டிற்கு வருகிறார். அப்போது இனியா வீட்டில் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். இத்துடன் தொடர் முடிகிறது.






