கோபியின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட பாக்கியா, வாயடைத்து போன ராதிகா- பாக்கியலட்சுமி

0
136
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழில் படத்தின் பூஜைக்காக எல்லோருமே வந்தார்கள். எழில் தன் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது தயாரிப்பாளர்-கோபி இருவரும் எல்லா டாக்குமென்டில் கையெழுத்து வாங்கி, இந்த பூஜைக்கு உங்களுடைய அம்மா வரக்கூடாது என்று மிரட்ட, எழிலுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் தனியாக சென்று எழில் ரொம்ப வருத்தப்பட்டார். அப்போது பூஜைக்கு வந்த பாக்கியாவை பார்த்து எழில், நீ உள்ளே வர வேண்டாம். கிளம்பி போ என்று சொல்ல, பாக்கியாவும் மனம் உடைந்து அழுது கொண்டு வெளியே போனார்.

-விளம்பரம்-

மேலும், எழில் தன் படத்திற்கான டைட்டிலில் பாக்கியலட்சுமி என்று வைத்து இருந்தார். அதை பார்த்த உடனே எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், கோபி ஷாக்கி கோபப்பட்டார். எழில், தன்னுடைய அம்மாவை பற்றி ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் பேசி இருந்தார். இதையெல்லாம் வெளியில் நின்று கேட்ட பாக்யா ஆனந்தத்தில் அழுதார். பின் எழில், தன் அம்மாவிடம் பேசியதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் பாக்கியா, ஈஸ்வரிடம் புதிய ஆர்டரை பற்றி பேசி வலுக்கட்டாயமாக ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அங்கு விறுவிறுப்பாக வேலைகள் எல்லாமே நடந்து கொண்டிருந்தது. ஜெனி- செழியன்- இனியா மூவருமே காரில் பேசிக் கொண்டு வந்தார்கள். அப்போது செழியன், இனியா இருவருமே எழிலின் பூஜைக்கு பாக்கியா வராததை குறித்து திட்டி கொண்டு இருக்க, பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து ஜெனி பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் பாக்கியவுடன் மற்ற பெண்கள் எல்லோருமே கண் விழித்து தூங்காமல் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஈஸ்வரியும் அவர்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார்.

நேற்று எபிசோட்:

பின் கோபி, எழில் பூஜையில் பாக்யா அவமானப்பட்டதை நினைத்து சந்தோஷப்பட்டு ராதிகாவிடம் சொல்லி இருந்தார். நேற்று எபிசோடில், ஆர்டரை நல்லபடியாக பாக்யா செய்து முடித்து இருந்தார். அப்போது ஆனந்திற்கு கோபி போன் செய்தார். இதை அறிந்த பாக்கியா, ஆனந்தை பேச சொன்னார். அதில் கோபி, போன முறை கெட்டு போன சிக்கனில் பிரியாணி கொடுத்தீர்கள். இந்த முறை என்ன? எப்படியாவது ஆர்டரை கெடுங்கள் என்று கேட்க, ஆனந்த் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இதையெல்லாம் கேட்டு எல்லோரும் ஷாக்காகி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அப்போது பாக்கியா, எனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும். இந்த பிரச்சனை நடந்தபோதே ஆனந்தை விசாரித்து தெரிந்து கொண்டேன். அப்போதுதான் அவர் செய்த தவறை உணர்ந்தார். நான் தான் கோபியிடம் நடிக்க சொல்லி இருந்தேன். இந்த விஷயம் என் மாமியாருக்கும் தெரியும் என்றார். உடனே ஈஸ்வரி, ஆனந்த் சொன்ன விஷயத்தை பற்றி சொன்னார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், இனியா- செழியன் இருவரும் மீண்டும் பாக்யா பூஜைக்கு வராததை பற்றி பேச, எழில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியாவை பார்த்த ராதிகாவின் அம்மா, கோபி இருவருமே திட்டுகிறார்கள். உடனே கோபத்தில் பாக்கியா, என்னுடைய ரெஸ்டாரண்டில் நீங்கள் செய்த வேலை எல்லாம் தெரியும். கெட்டுப் போன சிக்கனை வைத்து என்னை அழிக்க மக்களுடைய உயிரில் விளையாடுவதா? கேவலமா இல்லையா? என்று பயங்கரமாக பேசுகிறார். உண்மை அறிந்த ராதிகா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். கோபி எவ்வளவு சமாளித்தும் முடியவில்லை. பின் பாக்கியா, இனிமேல் என்ன செய்யப் போகிறேன் என்று பார் கோபிநாத் என்று சவால் விட்டு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement