விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ரெஸ்டாரண்டில் பாக்கியா, இனியா திருமணத்தை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது செல்வி, இனியா நன்றாக இருக்க வேண்டும். வசதியான மாப்பிள்ளை பார்த்து இருக்கிறீர்கள். அங்கேயே கல்யாணம் செய்து விடுங்கள் என்று தன் மனதுக்குள் இருக்கும் ஆசையை அடக்கிக் கொண்டு சொன்னார். பாக்கியாவால் எதுவும் பேச முடியாமல் அழுதார். இன்னொரு பக்கம் கோபி, இனியாவை அழைத்துக் கொண்டு ஆகாஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு ஆகாசிடம் கோபி, இனியாவிற்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம். ரொம்ப வசதியானவன், பணக்காரவன் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருந்தார். அதைக் கேட்டு ஆகாசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

பின் கோபி, நீயே உன்னுடைய பிரண்டை திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள சொல் என்றவுடன் ஆகாசும் மனதுக்குள் வலியை வைத்துக்கொண்டு, நீ அந்த பையனை திருமணம் செய்து கொள் என்று சொன்னார். அதற்கு பின் தன்னுடைய அம்மாவிடம் இனியா, ஆகாஷ் வீட்டில் நடந்ததை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பாக்கியா, உன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. உன் அப்பா பேச்சை கேட்காதே என்று அறிவுரை சொன்னார். அடுத்த நாள் சுதாகர் வீட்டில் எல்லோருமே திருமணத்திற்கு துணிகளை எடுக்க சென்றார்கள். திருமண வேலைகளும் நடந்து கொண்டிருக்க, பாக்யாவால் எதுவும் தடுக்க முடியவில்லை.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் பாக்கியா வீட்டில் எல்லோருமே இனியாவின் திருமணத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் வேலையை பிரித்து செய்வதை பற்றி பேசினார்கள். அதோடு இனியாவிற்கு யார் யார்? என்னென்ன செய்வது என்றெல்லாம் பேசி இருந்தார்கள். ஆனால், இதைப் பற்றி எல்லாம் இனியா கண்டு கொள்ளவே இல்லை. பாக்கியாவுமே அரை மனதோடு கல்யாண வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். பின் ரெஸ்டாரண்டில் பாக்கியா வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த சுதாகர், நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதுநாள் வரைக்கும் நான் உங்களிடம் ஏதும் கேட்கவில்லை.

நேற்று எபிசோட்:
வரதட்சணையாக உங்கள் மகள் பெயரில் இந்த ரெஸ்டாரண்டை எழுதி வையுங்கள் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் பாக்கியா ரொம்ப ஷாக் ஆனார். இந்த ரெஸ்டாரண்டின் பெயரை மட்டும் மாற்றி என்னுடைய கம்பெனியின் பெயரை வையுங்கள். மற்றபடி இந்த பொறுப்பை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொன்னார். பாக்கியா, யாருக்காகவும் எதற்காகவும் இந்த ரெஸ்டாரண்டை கொடுக்க மாட்டேன் என்று இருந்தார். உடனே சுதாகர், நாளை உங்கள் மகள் நிச்சயதார்த்தம் நடக்க வேண்டுமா? இல்லையா? என்று முடிவு செய்யுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, ரெஸ்டாரண்டில் சுதாகர் சொன்ன விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொல்கிறார். ஆனால், அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. கோபி, ஈஸ்வரி, செழியன் மூவருமே சுதாகருக்கு சப்போட்டாக தான் பேசுகிறார்கள். ரெஸ்டாரன்ட் அவருடைய பெயரில் இருப்பது நல்ல விஷயம் தான் என்கிறார்கள். உடனே ஈஸ்வரி, உன் மகளுக்காக இதைக் கூட தர மாட்டாயா? நல்ல வசதியான குடும்பம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், பாக்கியா யார் சொல்வதையும் கேட்கவில்லை.

சீரியல் ட்ராக்:
அதற்கு அவர், என்னுடைய ரெஸ்டாரண்டை யாருக்காகவும் கொடுக்க முடியாது. இதற்கு நானே முடிவெடுக்கிறேன் என்று சொல்கிறார். பின் இனியாவிடம் பேசிய பாக்கியா, நான் எந்த முடிவு எடுத்தாலும் உனக்கு சம்மதமா? என்று கேட்கிறார். இனியா, எனக்காக நீங்கள் நிறைய தியாகம் செய்துவிட்டீர்கள். இந்த ரெஸ்டாரண்டை விடாதீர்கள். கல்யாணம் நின்றாலும் எனக்கு கவலை இல்லை என்று சொல்கிறார். பின் கோபி, சுதாகரை சந்தித்து பேசுகிறார். அப்போது சுதாகர், நான் ரெஸ்டாரண்ட் பெயரை மாற்றி வைக்க தான் சொன்னேன். மற்றபடி பொறுப்பெல்லாம் அவர்கள் தான். இதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றாலும் எனக்கு பிரச்சனை இல்லை. அவர்கள் தான் தப்பாக புரிந்து இருக்கிறார்கள் என்று அப்படியே மாத்தி பேசி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






