விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபியின் செயலால் மனம் உடைந்த ராதிகா,
வீட்டை காலி செய்ய வேகவேகமாக எல்லா துணிகளையும் பேக் செய்தார். அவருடைய அம்மா தடுத்தும் கேட்கவில்லை. கோபி வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டு பேசி இருந்தார் ராதிகா. பின் இனியா டான்ஸ் காம்பெடிஷன் நடந்தது. எல்லோருமே சந்தோஷமாக கல்லூரிக்கு போனார்கள். இனியாவுக்கு கோபி என்கரேஜ் செய்து அனுப்பி வைத்தார். பின் இனியா சூப்பராக நடனமாடி இருந்தார். இதையெல்லாம் டிவியில் ராதிகா பார்த்துக் கொண்டிருந்தார்.

இனியா கல்லூரியில் நடனப்போட்டி நன்றாக நடந்து முடிந்தது. அதில் முதல் ஃபைனலிஸ்டாக இனியா தேர்வாகியிருந்தார். அப்போது அவர் மேடையில் தன்னுடைய அம்மா, அப்பா இருவரையும் அழைத்துக் கொண்டு போய் பேசி இருந்தார். இதையெல்லாம் டிவியில் பார்த்த ராதிகா, வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பின் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா, மயூவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, பரிசு கொடுத்தார்.
அப்போது ராதிகா, இனியா கல்லூரி விழா மேடையில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்தேன் என்று சொன்னார்.
பாக்கியலட்சுமி:
அதற்கு பாக்கியா, இனியாவின் அப்பாவாகவும், அம்மாவாகவும் தான் அங்கு இருந்தோம். மற்றபடி வேறு எதுவுமே இல்லை. எல்லாம் மாறும் நம்பிக்கையாக இருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். அதற்குப் பின் கோபி, எல்லோருக்குமே சாப்பாட்டை ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து தந்தார். ஆனால், பாக்யா அதை வாங்கிக்கொள்ளவில்லை. பின் மயூ பர்த்டேவிற்கு கிளம்பிய கோபியை, ஈஸ்வரி- இனியா எல்லோருமே போகவிடாமல் தடுத்தார்கள். இதையெல்லாம் பார்த்து பாக்யாவிற்கு பயங்கர கோபம் வந்தது. நேற்று எபிசோட்டில் மயூ கோபியை பார்த்து பேச வேண்டும் என்று ரொம்ப ஆசையாக அவர் வீட்டு வாசலில் இருந்தார்.

நேற்று எபிசோட்:
அந்த சமயம் வந்த ராதிகா, வீட்டிற்கு போகலாம் என்று மயூவை அழைத்து வந்தார். இன்னொரு பக்கம்
கோபி, மயூவிற்காக பரிசு வாங்குவதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, நாம குலதெய்வ கோவிலுக்கு போகணும். அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று வேண்டுமென்று வீட்டில் எல்லோரிடமும் ஈஸ்வரி சொன்னார். கோபியால் எதுவும் பேச முடியவில்லை. அதற்கு பாக்யா, நான் வரவில்லை. எனக்கு வேலை இருக்கிறது என்று சொன்னவுடன் ஈஸ்வரி விவாதம் செய்தார். ஆனால், பாக்கியா முடியாது என்று மறுத்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
கடைசியில் செழியன், இனியா, ஈஸ்வரி,கோபி தான் கோயிலுக்கு போனார்கள். இன்னொரு பக்கம் கோபி வருவார் என்ற ஆசையில் ராதிகா, மையூ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி தன்னுடைய குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் விஷயத்தை அறிந்த மையூ பாட்டி, ராதிகாவிடம் சொல்கிறார். இதனால் ராதிகா கோபப்பட்டுகி, வீடு காலி செய்வதாக ஓனரிடம் சொல்கிறார். பின் ராதிகா வீட்டை காலி செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். இதை அறிந்த பாக்கியா, ராதிகாவிடம் தனியாக பேச அழைக்கிறார். பாக்கியா- ராதிகா இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக் :
அப்போது ராதிகா, உங்களுக்கு விவாகரத்து ஆகும் போது எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள்? என்று கேட்க, நான் இந்த வாழ்க்கையை விட்டு வெளிவந்த பிறகு தான் நான் யார்? என்று தெரிந்து கொண்டேன். நான் சந்தோசமாக நிம்மதியாக இருக்கிறேன் என்று பாக்கியா சொல்கிறார். அதற்கு ராதிகா, நான் நிம்மதியாக இல்லை. தினம் தினம் பஞ்சாயத்தை சந்திக்க நான் தயாராக இல்லை. நான் தேர்ந்தெடுத்த ரெண்டு வாழ்க்கையுமே தவறாக முடிந்தது என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். இன்னொரு முறை யோசித்துப் பாருங்கள் என்று பாக்கியா சொல்லியுமே அவர் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய அம்மா, பிள்ளைகளுடன் சந்தோஷமாக கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






