விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் நடனப் போட்டியில் தேர்வான விஷயத்தை வீட்டில் இனியா சொல்ல எல்லோரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால், டிவியில் வரும் நிகழ்ச்சியில் நடனமாட வேண்டும் என்று இனியா சொன்னவுடன் படிப்பு வீணாக போய்விடும், நடனமெல்லாம் வேண்டாம் என்று ஈஸ்வரி- பாக்கியா இருவருமே சொன்னார்கள். ஆனால், இனியா அவர்கள் சொன்னதை கேட்காமல் தன்னுடைய அப்பாவிடம் நடந்ததை சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று கோபி, இனியாவை தூண்டி விட்டார்.
பின் கோபி உடன் இனியா பேசுவதை பார்த்த ஈஸ்வரி, எதற்கு அவனுடன் பேசுகிறாய்? என்று கேட்டதற்கு இனியா பதில் பேச, ஈஸ்வரி மனமடைந்து உள்ளே சென்று விட்டார். இன்னொரு பக்கம் ராதிகா, இனியாவுக்கு நீங்கள் ரொம்ப சப்போர்ட் செய்கிறீர்கள். இது நல்லது கிடையாது. நீங்கள் பாக்யாவை பழிவாங்க, உங்கள் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறீர்கள் என்று திட்டி விட்டு சென்றார். இந்த வாரம் இனியா நடனம் ஆடுவதை பற்றி எழில் வீட்டில் பேச, பாக்கியா-ஈஸ்வரி இருவருமே ஒத்துக் கொள்ளவில்லை. இனியாவிற்கு ஆதரவாக ஜெனி- செழியன்- எழில் மூவருமே வாக்குவாதம் செய்தார்கள்.
பாக்கியலட்சுமி:
கடைசியில் இனியா நடனம் ஆட பாக்கியா-ஈஸ்வரி ஒத்துக்கொண்டார்கள். பின் இனியாவை கல்லூரியில் விட ஈஸ்வரி போக, அப்போது ராதிகாவின் அம்மா, உனக்கு புருஷன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? அவருடைய மாலை கூட காய்ந்திருக்காது, அதுக்குள் மேக்கப் பண்ணிக் கொண்டு கிளம்பி விட்டாயா என்று ரொம்ப வன்மமாக பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு மனமடைந்த ஈஸ்வரி வீட்டிற்குள் சென்று இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இனியாவிடம் சொல்லி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் பாக்கியா வங்கிய புதிய ஆர்டரை சொதப்ப கோபி வைத்த நபர் திட்டம் போட்டார். ஆனால், அவரை வேற வேலை பாருங்கள். நாங்கள் புதிய ஆர்டர் பார்த்து கொள்கிறோம் என்கிறார் என்று பாக்கிய சொல்லிவிட்டார். பின் ஈஸ்வரி, இனியாவை கல்லூரியில் கொண்டு போய் விட சொல்லி செழியன் இடம் கேட்க, அவர் கோபப்பட்டு பேசி இருந்தார். நேற்று எபிசோட்டில், எனக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இனியாவை கூட்டிக்கொண்டு போக முடியாது என்று கோபமாக செழியன் பேசியதால் மனமடைந்து ஈஸ்வரி சென்று விட்டார்.
கோபி செய்த வேலை:
இதை ஜெனி, பாக்கியாவிடம் சொல்ல அவர், செழியனை திட்டி அறிவுரை சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் கோபி, பாக்கியா ரெஸ்டாரண்டை ஒழிக்க புது ஐடியா சொல்கிறார். இதை கேட்டு அந்த நபர் சம்மதிக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் ஈஸ்வரியை தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு பாக்கியா அழைத்து செல்கிறார். ஆனால், அங்கிருந்தவர்கள் ஈஸ்வரியை பார்த்து நக்கலாகவும்,ஏளனமாகவும் பேசுகிறார்கள். இதையெல்லாம் கேட்டு ஈஸ்வரி மனமடைந்து வீட்டுக்கு வந்து விடுகிறார். அப்போ வீட்டிற்கு வரும்போதும் அக்கம் பக்கத்தினர் ஈஸ்வரியை திட்டுகிறார்கள். இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி, நான் எங்கும் வரவில்லை. வீட்டுக்குள்ளே இருக்கிறேன், எனக்கு பொட்டு வேண்டாம் என்று கதறி கதறி அழுகிறார்.
இன்றைய எபிசோட்:
இதனால் கோபப்பட்ட பாக்கியா, ஈஸ்வரியை மோசமாக பேசியவர்களை கடுமையாக திட்டிகிறார். அதற்குப்பின் இனியா, ராதிகா அம்மா பேசியதை சொன்னவுடன் பாக்கியா, ராதிகாவிடம் உங்கள் அம்மாவிற்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை. என் மாமியார் எங்க போகணும், போகக்கூடாது என்று சொல்வதற்கு உங்க அம்மா யார்? இனியும் அவர்கள் தலையிட்டால் தொலைத்து விடுவேன் என்று கோபமாக திட்டி விடுகிறார். பின் ராதிகா, இதை பற்றி தன்னுடைய கேட்டதற்கு, எல்லாரும் போல தான் நான் கேட்டேன் என்று சமாளிக்கிறார். இதனால் ராதிகா தன் அம்மாவை திட்டி விட்டு ஈஸ்வரியை பார்க்க வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது