விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் கெட்டுப்போன சாப்பாட்டை ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் கொடுத்ததாக சொல்லி கலவரம் வெடித்தது. அதனால், உணவுத்துறை அதிகாரிகள் ரெஸ்டாரண்டுக்கு சீல் வைத்து, 50 ஆயிரம் பைன் போட்டு இருந்தார்கள். இதனால் எல்லாருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டை குறித்து ராதிகாவிடம் சொல்ல, அவர் அதை நம்பவில்லை. பின் பாக்கியாவை பார்த்து கோபி, சந்தோஷத்தில் கிண்டலும் கேலியும் செய்திருந்தார்.
பின் ஆபிசில் செழியனுக்கு வேலை போய் விடுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த செழியன் ஒரு குழந்தையைப் போல அழுது புலம்ப, கோபியும் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தி இருந்தார். ஆனால், இந்த விஷயத்தை செழியன் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்பை தேடி தயாரிப்பாளரை எழில் சந்தித்தார். ஆனால், அவர் வாய்ப்பு தர மறுக்க, எழிலும் மன்னிப்பு கேட்டு கெஞ்சியும் அவர் எதையுமே காதில் வாங்கவில்லை.
பாக்கியலட்சுமி:
இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, பாக்யா நாளைக்குள் கஸ்டமர்களுக்கு பணம் செட்டில் பண்ணவில்லை என்றால் அவள் கதி அரோகதி என்று சொல்ல, பாக்கியம் மீது எதற்கு உங்களுக்கு இவ்வளவு வன்மம் என்று ராதிகா திட்டி இருந்தார். உடனே ராதிகாவின் அம்மாவும் கோபிக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து எழில் தனது அம்மாவை போலீஸ் கைது செய்வது போல் கெட்ட கனவு காண, அமிர்தா அவரை சமாதானம் செய்து தூங்க வைத்தார்.
நேற்று எபிசோட்:
மறுநாள் பாக்கியா, வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தார் அப்போது ஹோட்டலில் வேலை செய்த பெண்கள் பாக்கியாவிடம் வந்து தங்கள் வேலையை நினைத்து கஷ்டப்பட்டு பேச, பாக்யா அவர்களுக்கு ஆறுதல் கூறி மீண்டும் நாம் ஹோட்டலை திறப்போம் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி இருந்தார். இந்நிலையில் இன்று எபிசோட்டில், எல்லா நகைகளையும் அடமானம் வைக்க இருப்பதாக ஈஸ்வரியிடம் பாக்கியலட்சுமி சொல்கிறார்.
இன்றைய எபிசோட்:
உடனே ஈஸ்வரி, தன்னிடம் இருக்கும் நகைகளை எல்லாம் கொடுத்து தாலியையும் கொடுக்கிறார்.
இதனால் பாக்கியா கோபப்பட்டு, என்னிடம் இருக்கும் தாலிக்கு அர்த்தமே கிடையாது. இதை வைத்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. உங்களுக்கு கொடுத்த எல்லா வாக்குறுதியும் நிறைவேறி விற்று தான் மாமா சென்றிருக்கிறார். அது அவருடைய நினைவாக என்றென்றும் உங்களிடம் இருக்க வேண்டும் என்று சொல்ல ஈஸ்வரி மனம் உடைந்து அழுகிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து பழனிச்சாமி வீட்டிற்கு வந்து பண உதவி செய்வதாக கேட்கிறார். ஆனால், பாக்யா வாங்க மறுத்து விடுகிறார். இன்னொரு பக்கம் ஜெனி, வேலைக்கு நேரம் ஆகிவிட்டது கிளம்ப சொல்லி செழியன் இடம் சொல்கிறார். ஆனால், அவரால் எதுவும் பேச முடியாமல் தயங்கி தயங்கி நிற்கிறார். கடைசியில் தன்னுடைய நகைகள் எல்லாம் எடுத்து பாக்யா பேங்க் சென்று அடகு வைக்கிறார். அப்போது வந்த எழில், தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டு புலம்புகிறார் இத்துடன் சீரியல் முடிகிறது.