விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொன்னதால், ஈஸ்வரி அழுது புலம்பி தடுத்து விட்டார். அதற்கு ஏற்ப கோபிக்கு நெஞ்சுவலி வந்ததால் பாக்கியா அமைதியாக இருந்தார். அதற்குப்பின் ராதிகா, கோபியை பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது மயூவின் பிறந்தநாளை பற்றி ராதிகா சொல்ல, இனியாவின் டான்ஸ் போட்டி பற்றியே தான் பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரி வந்தவுடன் ராதிகா அங்கிருந்து கிளம்பி விட்டார். அப்போது இனியா, தயவுசெய்து என் அப்பாவுக்கு விவாகரத்து கொடுங்கள் என்று ரொம்ப மோசமாக ராதிகாவிடம் பேசி இருந்தார்.

இதனால் ராதிகா ரொம்பவே மனமடைந்து வீட்டை காலி செய்ய முடிவு எடுத்தார். இதை அறிந்த கோபி ராதிகாவை வீட்டிற்கு வரவைத்து பேசி இருந்தார். அப்போது ராதிகா, நீங்கள் வர மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எல்லோரும் உங்களை வரவிட மாட்டார்கள். அதனால் தான் நாங்கள் கிளம்பி போகிறோம் என்றார். நேற்று எபிசோட்டில் கோபி, அதெல்லாம் வேண்டாம். ஏன் புரிந்து கொள்ள மாட்டுகிறாய்? என்று ராதிகாவிடம் வாக்குவாதம் செய்ய, அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்தது. இதனால் எல்லோருமே பதறி போனார்கள். எதுவும் பேச முடியாமல் ராதிகா அமைதியாக இருந்தார்.
பாக்கியலட்சுமி:
இனியா, உங்களால் தான் எங்க அப்பாவிற்கு இந்த நிலைமை. தயவு செய்து எங்க அப்பா வாழ்க்கையை விட்டு சென்று விடுங்கள். என் அப்பாவை பார்க்க வராதீர்கள் என்று பேச, ராதிகா ரொம்பவே மனமடைந்து விட்டார். இதையெல்லாம் கேட்ட பாக்கியா, இனியாவை அடித்து விட்டார். பின் வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக ஓய்வெடுக்க போனார். ஈஸ்வரி, ராதிகாவை ரொம்ப மோசமாக திட்டி அனுப்பி இருந்தார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் கோபி, தன்னுடைய நண்பர் செந்தில் இடம் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், ஒரு பக்கமாக நில்லு. இரண்டு பக்கமும் கால் வைத்து தவிக்காதே. எதுவாக இருந்தாலும் சரியான முடிவெடு என்று அறிவுரை செய்தார். நேற்று எபிசோட்டில் ராதிகா, வேகவேகமாக எல்லா துணிகளையும் பேக் செய்து, இங்கிருந்து கிளம்பலாம் என்று சொல்ல, அவருடைய அம்மா தடுத்தார் ஆனால், ராதிகா கேட்கவில்லை. கோபி வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டு பேசி இருந்தார் ராதிகா.

சீரியல் ட்ராக்:
அதற்கு அவர் அம்மா, தன் மகளின் வாழ்க்கை நினைத்து வேதனைப்பட்டார். பின் இனியா டான்ஸ் காம்பெடிஷன் நடந்தது. எல்லோருமே சந்தோஷமாக கல்லூரிக்கு போனார்கள். இனியாவுக்கு கோபி என்கரேஜ் செய்து அனுப்பி வைத்தார். பின் இனியா சூப்பராக நடனமாடி இருந்தார். அதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷமாக கைதட்டி ரசித்தது. இதையெல்லாம் டிவியில் ராதிகா பார்த்துக் கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=sVgoq8Q5YGY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் ராதிகா, வீடு காலி செய்யும் விஷயம் அறிந்த பாக்கியா அவரை சந்தித்து பேசினார். அப்போது அவர், நீங்கள் எடுத்த முடிவு சரியா? என்று கேட்க, நான் எடுக்க முடிவு எல்லாமே தவறு தானே என்று ராதிகா வேதனையில் சொல்கிறார். அதற்குப்பின் பார்க்கில் பாக்யா-ராதிகா பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்யா, நான் விவாகரத்து செய்த பிறகு தான் நான் யார் என்பதை தெரிந்து கொண்டேன். விவாகரத்துக்கு பிறகு தான் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்கிறார். ராதிகா, நான் கல்யாணம் செய்த பிறகு தான் என்னுடைய வாழ்க்கை நாசமாகிவிட்டது என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்.






