விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, ஆகாஷ்- இனியா இதை செய்வார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. ஆகாஷ் அவன் வாழ்க்கையில் முன்னேறனும், இனியாவும் படித்து அவளுக்கென சுயமாக நிற்க வேண்டும். இதற்காக தான் நான் போராடினேன். தினமும் அவளுக்கு நிறைய அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால், அவள் எதற்காக இப்படி செய்தால் என புரியவில்லை என்று புலம்பி இருந்தார். மறுநாள் காலையில் இனியா வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசி இருந்தார். ஆனால், யாருமே முகம் கொடுத்து பேசவில்லை. செழியன் மோசமாக இனியாவை திட்டி இருந்தார்.

இதனால் பாக்கியா கோபப்பட்ட பாக்கியா, செழியனை திட்டி இருந்தார். அதற்குப்பின் இனியா, பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார். அப்போது பாக்கியா, நீ உன் வாழ்க்கையில் முன்னேறனும். அதில் மட்டும் கவனம் செலுத்து. வேறு எதையும் பற்றியும் யோசிக்காதே. நன்றாக படி என்று சொன்னவுடன் இனியா, நான் படித்து முன்னேறுவேன் என்று தன்னுடைய அம்மாவிற்கு சத்தியம் செய்தார். அதற்கு பின் பாக்கியா ரெஸ்டாரண்ட்க்கு கிளம்பி இருந்தார். உடனே ஈஸ்வரி, வீட்டில் என்ன நடக்கிறது, நீ என்ன செய்கிறாய்? இனிமேல் எங்கேயும் வேலைக்கு போகக்கூடாது. வீட்டில் தான் இருக்கணும் என்று ஆவேசமாக பாக்கியாவிடம் பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோடில் ஈஸ்வரி ரொம்ப மோசமாக பாக்கியாவை வேலைக்கு செல்லக்கூடாது என்று திட்டி விட்டார் உடனே ஆவேசப்பட்ட பாக்கியா, எல்லாம் பேசி முடித்து விட்டீர்களா? எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். எல்லா பிரச்சனைக்குமே நான் மட்டும் பொறுப்பேற்க முடியாது. உங்கள் மகனும் தான் பொறுப்பு. எல்லாத்திற்கும் என்மீது குறை சொல்லாதீர்கள் என்று ஈஸ்வரியை எதிர்த்து பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். இதைக் கேட்டு ஈஸ்வரி ஷாக் ஆகி கோபியிடம் புலம்பி இருந்தார்.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் பாக்கியா ரெஸ்டாரண்ட் கிளம்பி போனார். அங்கு செல்வியை தேடினார். ஆனால், அவர் இல்லை. அதற்கு பின் செல்வி வீட்டிற்கு பாக்கியா சென்றார். அங்கு செல்வி, பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டு ரொம்பவே எமோஷனலாக கதறி அழுதார். பின் ஆகாசிடம் பாக்கியா, உன் படிப்பில் கவனம் செலுத்து. அதுதான் உன்னுடைய வாழ்க்கைக்கு நல்லது. இனியாவிடமும் நான் அதை தான் சொல்லி இருக்கிறேன். இரண்டு பேருமே இனி பேசக்கூடாது, படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஆகாஷ், இனியாவிற்கு போன் செய்கிறார். இதனால் ஆவேசத்தில் கோபி, செழியன் இருவரும் செல்வியின் வீட்டுக்கு செல்கிறார்கள். அப்போது கோபத்தில் செழியன் ஆகாஷை அடிக்கிறார். ஆகாஷ் சொல்வதைக் கேட்காமல் கோபி, செழியன் இருவரும் கோபப்பட்டு திட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் செழியன், கட்டை எடுத்து ஆகாஷ் தலையில் அடித்து விடுகிறார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆகாசிற்கு சப்போர்ட் செய்ய, செழியன்- கோபி அங்கிருந்து சென்று விடுகிறார்கள். அதற்குப்பின் ஆகாஷை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு செல்விக்கு தகவலை சொல்கிறார்கள். உடனே செல்வி, பாக்கியா இருவரும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது நடந்ததை செல்வி இடம் சொல்ல, அவர் ரொம்ப வருத்தப்படுகிறார். கோபத்தில் கொந்தளித்த பாக்கியா வீட்டிற்கு வந்து செழியன் இடம் பேசுகிறார். அப்போது அவர், எதற்கு ஆகாஷை அடித்தாய்? அவனை அடிக்கும் உரிமை உனக்கு யார் கொடுத்தது? என்று கேட்க, வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். ஈஸ்வரி-கோபி இருவரும் செழியனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். அதற்கு பாக்கியா, ஒரு அப்பாவாக பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை சொல்லி வளர்க்கனும், ரவுடிசத்திற்கு அழைத்து செல்லக்கூடாது என்று கோபியை திட்டுகிறார். ஆனால், செழியன் இன்னும் மோசமாக ஆகாஷை பேச, ஆத்திரம் தாங்க முடியாமல் பாக்கியா செழியினை அடிக்க கை ஓங்குகிறார். ஆனால் அடிக்கவில்லை, செழியனை திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






