விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியலட்சுமி ஹோட்டலில் சாப்பிட வந்த கஸ்டமர் எல்லாம் தங்களுக்கு தெரிந்த பாடல்களை பாடி இருந்தார்கள். அந்த சமயம் வந்த கோபி, நானும் பாடுவேன். அதைக் கேட்டு எனக்கும் டிஸ்கவுண்ட் செய்யுங்கள் என்று சொன்னார். பின் கோபி அருமையாக பாடுவதை கேட்டு பாக்கியா அசந்து போய்விட்டார். கோபி, நான் பாடுவேன் என்று உனக்கு இதுவரை தெரியாது. எப்படி இருக்கிறது என் பாட்டு என்று கேட்டார். நன்றாக இருக்கிறது என்று பாக்கியா சொன்னார். அதற்குப்பின் ராதிகாவிடம் ஈஸ்வரி பேசியதை பற்றி கோபி சொன்னார். அதற்கு பாக்கியா, எனக்கு அதைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை. அது உங்கள் விருப்பம் என்று சொல்லி விட்டார்.

இன்னொரு பக்கம் நிதிஷ் வழக்கம் போல் டிரக்ஸ் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். நிதிஷ் நடவடிக்கைகள் சரி இல்லை. இதனால் பயந்த அவருடைய அப்பா, அம்மா இருவருமே நிதிஷை ரூமிற்கு அழைத்து போனார்கள். இதை பார்த்த இனியா, என்னாச்சு? இவர் ஏன் குடிக்கிறார்? என்றெல்லாம் கேள்வி கேட்டார். உடனே நிதிஷின் அம்மா, இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் நீதான் என்று வழக்கம்போல இனியாவை தான் திட்டி இருந்தார். பின் சுதாகர், எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசுலாம் என்று சொன்னார்.
இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்று வேதனையில் இருந்தார். அப்போது பாக்கியாவிடம் ஈஸ்வரி, நான் ராதிகாவை பார்த்து பேசியது உனக்கு எந்த வருத்தமும் இல்லை தானே என்று கேட்டார். அதற்கு பாக்கியா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, தன்னுடைய மகனின் நிலைமையை நினைத்து வேதனைப்பட்டு ரூமிற்கு சென்று விட்டார். பின் வீட்டிற்கு வந்த கோபி, ஈஸ்வரியிடம் பேச எவ்வளவு முயற்சித்தும் ஈஸ்வரி பேசவில்லை. உடனே பாக்கியா, நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் இனியா, நிதிஷிடம் பேச ரூமிற்கு போனார். உடனே நிதிஷ் அம்மா, நீ அவனை பார்க்க வேண்டாம் என்று தடுத்தார். அதற்கு இனியா, நான் அவருடைய மனைவி. அவரைப் பற்றி எனக்கு தெரிந்து இருக்க வேண்டும். குடித்திருந்தால் எல்லாம் இப்படி செய்ய மாட்டார்கள். அவருக்கு வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது.

நேற்று எபிசோட்:
என்னிடம் மறைக்கிறீர்கள் என்று கேட்டார். நிதிஷ் அம்மா, வழக்கம்போல் இனியா மீது தான் பழி போட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த சுதாகர், நாங்கள் எதுவும் மறைக்கவில்லை. தனக்கு பிடித்தவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை மறைத்தால் அவன் இப்படித்தான் நடந்து கொள்வான் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி இனியாவை அங்கிருந்து அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா ஹோட்டலுக்கு வரும் வழியில் கவுன்சிலர் மனைவி மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தார். அவருக்கு பாக்கியா உதவி செய்தார். இதை அறிந்த கவுன்சிலர், பாக்கியாவின் ஓட்டலுக்கு சென்று மன்னிப்பு கேட்டு நன்றியும் சொன்னார். பாக்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் திருமணம் செய்யும் விஷயமாக கோபி திட்டியதை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். வீட்டிற்கு வந்த கோபியிடமும் ஈஸ்வரி பேசாமல் கோபித்து இருக்கிறார்.
இதனால் கோபி எமோஷனாக பேச ஈஸ்வரி மனம் மாறி விடுகிறார். அந்த சமயம் பார்த்து இனியா வீட்டிற்கு வருகிறார். இனியாவின் பிறந்தநாள் என்பதால் கோபி அவருக்கு வைர மோதிரம் கிப்ட் வாங்கி கொடுத்தார். அதேபோல் பாக்கியாவும் இனியாவை அழைத்துக் கொண்டு அவருக்கு பிடித்ததை வாங்கி தருகிறார்.

சீரியல் ட்ராக்:
வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால், இனியா தன்னுடைய புகுந்த வீட்டில் நடப்பதை பற்றி சொல்லாமல் வேதனையை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலுமே பாக்கியா-கோபி இருவருமே இனியா நடவடிக்கையின் மீது சந்தேகப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் ஹோட்டலில் கவுன்சிலர் வழக்கம் போல் சாப்பிட வருகிறார். ஆனால், எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் சாப்பிட்டுவிட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு செல்கிறார். இது எல்லாம் பார்த்து பாக்கியாவிற்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்னொரு பக்கம் கோபி, இனியாவை விசாரிக்கிறார். ஆனால், இனியா ப்ரச்சனை எதுவும் இல்லை. நன்றாகத் தான் இருக்கிறேன் என்று சமாளிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






