மையூவை மோசமாக பேசிய ஈஸ்வரி, ராதிகா எடுக்கப் போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
147
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோர்ட்டில் பாக்கியாவின் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாக்கியாவின் லாயர், நாங்கள் கேஸ் வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்று சொன்னார். உடனே நீதிபதி, பாக்யாவை திட்டி விட்டு கேசை தள்ளுபடி செய்தார். இதையெல்லாம் கேட்டு ராதிகா- கோபி இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பின் கோபி ரொம்ப எமோஷனலாக பாக்கியாவிடம் பேசி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த கோபி, கோர்ட்டில் நடந்ததை சொல்ல ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், ஈஸ்வரி, பாக்கியாவை திட்டி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு கோபி, பாக்கியா என்னுடைய உயிரையும் மானத்தையும் காப்பாற்றி இருந்தார். அவளை பற்றி எதுவும் பேசாதீர்கள் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருந்தார். அதற்குப்பின் ராதிகா, ஈஸ்வரி பேசியதை பற்றி கேட்க, பாக்கியா பெருமையாக தான் பேசி இருந்தார். இது எல்லாம் கேட்ட ஈஸ்வரி, ராதிகாவிடம் சண்டைக்கு போனார். அதற்கு ராதிகா, ஈஸ்வரியை எதிர்த்து பேசி மிரட்டி இருந்தார். அதற்குப்பின் கோபி- ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கரமாக கோபம் தான் வந்தது. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு கோபியின் நண்பர் செந்தில் வந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

பின் கோபி-செந்தில் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோபி, பாக்கியா-ராதிகா ரெண்டு பேருமே வீட்டில் இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றெல்லாம் சொன்னார். இதை எல்லாம் கேட்டு ராதிகா கோபப்பட்டு கோபியிடம் சண்டை வாங்கினார். நேற்று எபிசோட்டில் பாக்கியா, தன்னுடைய புதிய ஆர்டருக்கு ஆட்கள் நிறைய தேவை. என்ன செய்வது? என்று புரியவில்லை என்று பேசிக் கொண்டிருந்தார். உடனே ஈஸ்வரி, இந்த ஆர்டர் வேண்டாம் என்று சொன்னார். அதற்கு ராதிகா, பண பிரச்சினை என்றால் நான் கடனாக கொடுக்கிறேன் என்றார். உடனே கோபி, என்னுடைய ரெஸ்டாரண்டில் இருந்து செஃப்களை அனுப்பி வைக்கிறேன்.

நேற்று எபிசோட்:

அவர்களை வைத்து சமைத்து கொள் என்று சொன்னார். இருந்துமே பாக்யா ஏற்றுக்கொள்ளவில்லை.
அதற்குப்பின் ஜெனி- செழியன் இருவரும் சொன்னதால் பாக்யா முழு மனது இல்லாமல் கோபி இடம் உதவி கேட்டார். கோபியும் சரி என்றார். உடனே ஈஸ்வரி, கோபி உனக்காக எல்லாம் செய்வேன். நீ தான் புரிந்து கொள்ளவில்லை என்று அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பது போலவே பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்ட ராதிகா கோபப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, எப்படியாவது பாக்கியா- கோபியை சேர்த்து வைக்க வேண்டும்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அதற்கான வேலையை நான் செய்யப்போகிறேன் என்று சொல்கிறார். உடனே செழியன், எப்படி முடியும் என்று சொல்ல, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் ஈஸ்வரி. அதற்குப்பின் இனியா தன்னுடைய டான்ஸ் காம்பிடிஷன் பற்றி கோபியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மையூ, தான் போட்டியில் வெற்றி பெற்றதை சொன்னவுடன் கோபி ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் அவருக்காக பரிசு வாங்கி தருவதாக சொல்கிறார். மையூ ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சீரியல் ட்ராக்:

கோபி சென்றவுடன் ஈஸ்வரி, உன் அப்பாவிடம் கேளு. கோபி இனியாவுடைய அப்பா. உனக்கு கிடையாது என்று ரொம்ப மோசமாக மையூவை பேசி விடுகிறார். இதனால் மையூ ரொம்ப எமோஷனலாக அழுகிறார். அங்கு வந்த ராதிகா, ஈஸ்வரி பேசியதை கேட்டு மையூவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறார். பாக்யா, ஈஸ்வரிடம் அவர் செய்த தவறை உணர்த்துகிறார். பின் ராதிகா- கோபி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோபி, இனியா டான்ஸ் காம்பிடிஷன் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், ராதிகா நடந்ததை பற்றி பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement